ஏப்ரல் 14-ல் அஜீத்தின் பில்லா 2!

posted Dec 20, 2011, 9:02 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Dec 20, 2011, 9:03 AM ]
அஜீத் நடிக்கும் பில்லா 2 படத்தின் ஷூட்டிங் 100 நாட்களுக்குள் முடிக்கப்பட்டுள்ளது.

மங்காத்தா ரிலீசுக்கு முன்பே, எப்போது தொடங்கியது என்று வெளியில் தெரியாத அளவுக்கு ஆரம்பித்தது பில்லா 2 ஷூட்டிங். விசாகப்பட்டிணத்தில் ஆரம்பித்து, பல பகுதிகளில் விறுவிறுவென படப்பிடிப்பை நடத்தி கிட்டத்தட்ட முடித்தே விட்டனர் இப்போது.

மொத்தம் 93 நாட்கள் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்துள்ளது. 5 நாட்கள் பேட்ச் ஒர்க் நடக்க உள்ளது. ஆக ஷூட்டிங் தொடர்பான வேலைகளுக்கு மொத்தம் 100 நாட்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையில், சக்ரி டோலெட்டி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தை இந்துஜா குழுமத்தின் இன் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கிறது.

இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வமான ஸ்டில்கள் பொங்கலன்று வெளியாகும், ட்ரெயிலர் பிப்ரவரியில் வெளியாகும் என்று இந்துஜா குழுமத்தின் சுனில் கேத்ரபால் தெரிவித்துள்ளார்.

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளதாகவும், ஏப்ரலில் படம் வெளியாகும் என்றும் இயக்குநர் சக்ரி டோலெட்டி கூறியுள்ளார்.

இந்தப் படத்துக்குப் பிறகு, ஏ எம் ரத்னம் தயாரிக்கும் புதிய படத்திலும், விஜயா புரொடக்ஷன்ஸின் அடுத்த படத்திலும் நடிக்கிறார் அஜீத்.