3டி தொழில் நுட்பத்தில் தமிழ் சினிமா

posted Dec 24, 2011, 8:39 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Dec 24, 2011, 8:56 AM ]
ரஜினி நடிக்கும் “கோச்சடையான்” படமும் சூர்யா நடிக்கும் புதுப்படமொன்றும் 3டி தொழில் நுட்பத்தில் தயாராகின்றன. “கோச்சடையான்” மெகா பட்ஜெட்டில் உருவாகும் அனிமேஷன் படமாகும். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்குகிறார். கே.எஸ். ரவிக்குமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார்.இதில் கதாநாயகிகளாக நடிக்க அனுஷ்கா, அசின், தீபிகா படுகோனே போன்றோர் பரிசீலிக்கப்படுகிறார்கள். இதன் படப்பிடிப்பு ஜனவரி 2-ந்தேதி துவங்குகிறது. 3டி தொழில் நுட்பத் தில் உருவாகும் முதல் ரஜினி படம் இதுவாகும். இதுபோல் சூர்யா நடிக்கும் 3டி படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகிறது.இதில் தெலுங்கு முன்னணி நடிகர் ரவிதேஜாவும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். முழுக்க 3டி கேமராவை பயன்படுத்தி இப்படத்தை எடுக்கின்றனர். இதில் நடிக்கும் கதாநாயகி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இந்த படத்தை பிரபுதேவா இயக்குவார் என தெரிகிறது. யுவன்சங்கர் ராஜா இசை அமைக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடக்கிறது.