இன்று மம்பட்டியான் உள்பட நான்கு படங்கள் ரிலீஸ்

posted Dec 16, 2011, 8:25 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Dec 16, 2011, 8:25 AM ]
இந்த வெள்ளிக்கிழமை மம்பட்டியான் உள்பட நான்கு புதிய படங்கள் வெளியாகின்றன.

மம்பட்டியான், உச்சிதனை முகர்ந்தால், மவுன குரு மற்றும் யுவன் ஆகிய இந்த நான்குப் படங்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை.

80களில் தியாகராஜன் நடிப்பில், இளையராஜா இசையில் வெளியாகி சக்கைப் போடுபோட்ட படம் மலையூர் மம்பட்டியான். மலையூர் என்ற கிராமத்தில் வாழ்ந்த மம்பட்டியான் என்பவரது உண்மைக் கதை இது.

இந்தப் படத்தை தன் மகன் பிரசாந்தை வைத்து ரீமேக் செய்கிறார் தியாகராஜன்.

படத்துக்கு தடை கோரி மம்பட்டியானின் உறவினர்கள் வழக்கு தொடர்ந்தாலும், தியாகராஜனின் பதில் மனுவை ஏற்று நீதிமன்றம் தடைசெய்யாமல் விட்டுவிட்டதால் படம் ரிலீசாகிறது.

அடுத்து உச்சிதனை முகர்ந்தால் என்ற படம். புகழேந்தி தங்கராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் ஈழத்து போரின் பாதிப்புகளை சொல்லும் படம். சீமான், சத்யராஜ் என பிரபல முகங்கள் நிறைய உண்டு.

மவுன குரு படம் ஆரம்பத்திலிருந்தே எந்த மாதிரி படம் என்றே புரியாமல் மர்மமாகவே உள்ளது. கருணாநிதி பேரன் அருள் நிதி பேரன் படம் இது.

கடைசியாக யுவன் என்ற படமும் ரிலீசாகிறது. கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ஒரு படத்தின் தமிழ் வடிவம் இது. ஆனால் பார்க்க போரடிக்காமல் உள்ளது யுவன்.