![]() அடுத்து கமல் ஜோடியாக புதிய தமிழ் படத்தில் நடிக்கப் போவதாக செய்தி வெளியாகி உள்ளது. இப்படத்தை ஷங்கர் இயக்குவதாகவும் ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அசின் அளித்த பேட்டி வருமாறு:- ஷங்கர் இயக்கும் படத்தில் கமல் ஜோடியாக நான் நடிக்கப்போவதாக வெளியான செய்தி யூகத்தின் அடிப்படையிலானது. ஷங்கரை பட விழாக்களில் சந்தித்து இருக்கிறேன். அப்போது பல விஷயங்கள் பற்றி என்னிடம் பேசுவார். பேஸ்புக்கிலும் நாங்கள் உரையாடுகிறோம். ஆனால் கமல் ஜோடியாக நடிப்பது பற்றி அவர் எதுவுமே என்னிடம் பேசியது இல்லை. அழைத்ததும் இல்லை. வாய்ப்பு வந்தால் கமல் ஜோடியாக நிச்சயம் நடிப்பேன். |
சினிமா >