2010 எந்திரன்.. 2011-ல் 'ரா.ஒன்'?

posted Oct 7, 2011, 11:53 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Oct 7, 2011, 11:54 AM ]
2010 ஆம் ஆண்டில் ரஜினியின் 'எந்திரன்' பெரும் வெற்றி பெற்றதை போல 2011-ல் தனது 'ரா.ஒன்' படம் இருக்க வேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார், நடிகர் ஷாருக்கான்.'சிவாஜி'யைத் தொடர்ந்து 'ரோபா' படத்தை இந்தியில் எடுக்கலாம் என்று நடிகர் ஷாருக்கான் அணுகினார் இயக்குனர் ஷங்கர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அப்படத்தில் இருந்து ஷாரூக் விலகியதால், எந்திரன் வாய்ப்பு ரஜினிக்கு கிடைத்தது. 
தற்போது நடிகர் ஷாருக்கான் நடித்து வரும் 'ரா.ஒன்' படத்தின் கதை விவரம் வெளியாகியுள்ளது. எந்திரன் படத்தை போலவே இரு வேடங்களில் ஷாருக்கான் நடித்து இருக்கிறார். விஞ்ஞானி ஒருவர் இரண்டு ரோபோக்களின் பெயர்களே 'ரா.ஒன்' மற்றும் 'ஜி.ஒன்'. ஷாருக்கான் விஞ்ஞானியாகவும் ரோபோவாக 'ஜி.ஒன்' ஆகவும் நடித்து இருக்கிறார். அர்ஜூன் ராம்பால் வில்லனாக ரா.ஒன்னில் நடித்து இருக்கிறார்.

ரா.ஒன் என்கிற ரோபோ கதாபாத்திரமும் எந்திரனில் சிட்டியாக ரஜினி நடித்தும் ஒன்று தான் என்கிறார்கள்.எந்திரன் படத்தை விட ரா.ஒன் படத்தின் கிராபிக்ஸிலும், தரத்திலும் மிரட்டலாக இருக்க வேண்டும் என்று முனைப்பு காட்டி வருகிறார் ஷாருக்கான். எந்திரன் படத்தின் பிரத்யோக காட்சியில் கூட அமிதாப் பச்சன், அமீர்கான் ஆகியோர் கலந்து கொண்டாலும் ஷாருக்கான் கலந்து கொள்ளவில்லை.  2010ம் ஆண்டில் தீபாவளிக்கு முன்பு திரைக்கு வந்தது எந்திரன், 2011ம் ஆண்டில் தீபாவளிக்கு அன்று திரைக்கு வர இருக்கிறது ரா.ஒன்.