ரோபோக்களின் பாக்சிங் அட்டகாசம் நிறைந்த ‘ரியல் ஸ்டீல்’

posted Oct 9, 2011, 9:31 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Oct 9, 2011, 9:33 AM ]
எந்திர மனிதன் செய்யும் பாக்சிங் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட படம் ‘ரியல் ஸ்டீல்’. இந்த எந்திர பாக்சிங் போட்டி பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்தவை. நிஜ பாக்சர்களின் கனவுகளை துவம்சம் செய்யும் அளவுக்கு இந்த சண்டைகாட்சிகளை வடிவமைத்திருக்கிறார்களாம்.

முழு நிள ஆக்ஷ்ன் படமான இதில் மற்றொரு பக்கம் அப்பா-மகன் நேசம் ,தேடல் ,பிரிவு, பாசப் போராட்டம் என்று இதயம் துடிக்கும் செண்டிமென்ட் பரபரப்பும் இருக்குமாம்.

2005ல் உருவான இக்கதை படமாக்க ஐந்து வருடங்கள் தேவைப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு கதை சிந்திக்க வைத்து திட்டமிடப்பட்டுள்ளது.

YouTube Video


சண்டை காட்சிகளில் 35 சதவிதம் ரோபோ சம்பந்தப்படவை தான். வரும் வெள்ளி முதல் திரை அரங்கில் வெளியாகவிருக்கும் இப்படம் தமிழிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. ரிலையன்ஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.