7 ஆம் அறிவு, வேலாயுதம் படங்களை தமிழகத்தைவிட கேரளாவில் அதிக ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறார்கள். இதற்கு காரணம் மங்காத்தா. அஜீத்துக்கு கேரளாவில் அத்தனை ரசிகர்கள் இல்லை. இருந்தும் மங்காத்தா அங்கு சூப்பர்ஹிட்டானது. மங்காத்தாவுடன் வெளியான மை டியர் குட்டிச் சாத்தான் 3டி, மோகன்லாலின் ப்ரணயம் ஆகிய படங்களைவிட வசூலில் இப்படமே முதலிடத்தைப் பிடித்தது. அதிக ரசிகர்கள் இல்லாத அஜீத்தின் படமே இந்த போடு போட்டால் அதிக ரசிகர்களை உடைய சூர்யா, விஜய்யின் படங்கள் வெளியானால்...? அதுவும் 7 ஆம் அறிவும், வேலாயுதமும் இதுவரை இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழ்ப் படங்கள் தான் கேரளாவில் இந்த வருட இறுதியை ஆளும் என்கிறார்கள். |
சினிமா >