விக்ரமின் அடுத்த படம் தாண்டவம்

posted Dec 26, 2011, 8:22 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Dec 26, 2011, 8:23 AM ]
விக்ரம் நடித்த ‘ராஜபாட்டை’ ரிலீசாகி அனைத்து திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து ‘தாண்டவம்’ என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார் விக்ரம்.  இப்படத்தை மதராசபட்டினம், தெய்வத்திருமகள் படங்களை இயக்கிய இயக்குநர் விஜய் இயக்குகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு டெல்லியில் புத்தாண்டு அன்று துவங்குகிறது.  அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டப் படப்பிடிப்பிக்காக அமெரிக்கா பறக்கிறார் விக்ரம்.