யுவனை பிரிந்தது ஏன்?

posted Oct 26, 2011, 9:02 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Oct 26, 2011, 9:03 AM ]
யுவன்சங்கர்ராஜாவும், சிம்புவும் இணை பிரியாத நண்பர்கள். இருவரும் சேர்கிற படம் மியூசிக்கல் ஹிட்டுதான் என்பதற்கு இதற்கு முன்பு வந்த அத்தனை படங்களையும்  உதாரணமாக சொல்லலாம். அப்படியெல்லாம் இருந்த இந்த நண்பர்கள் ஒஸ்தி படத்தில் பிரிந்தது ஏன்? இந்த கேள்வி எல்லா ரசிகர்களுக்கும் எழுமல்லவா? அதற்கு விடையளித்தார் சிம்பு. தொடர்ந்து பணியாற்றும் போது ஒரு சின்ன இடைவெளி இருந்தால் தேவலாம் போலிருக்கும். அந்த நேரத்தில்தான் நான் யுவனிடம் டிஸ்கஸ் செய்தேன். ஒஸ்திக்கு வேறு மியூசிக் டைரக்டரை போடலாம்னு இருக்கேன். யாரை போட்டால் நன்றாக இருக்கும் என்று கேட்டேன். அவர்தான் தமன் பற்றி சொன்னார்.

இந்த படத்திற்காக இரவு ஒரு மணிக்கும் இரண்டு மணிக்கும் கூட தமனை தொந்தரவு செய்திருக்கிறேன். ஆனால் எந்தவித மறுப்பும் சொல்லாமல் அந்த நேரத்தில் கூட நான் கேட்ட கரெக்ஷன்களை செய்து கொடுத்திருக்கிறார். தேங்க்யூ தமன் என்று சொல்வதற்கு முன்பு தேங்க்யூ யுவன் என்றுதான் சொல்லணும். சிம்புவின் இந்த சந்தோஷம் அடுத்த படத்திலும் தமனோடு தொடருமா?