29-வது முறையாக பிலிம்பேர் விருது வாங்கிய ஏ ஆர் ரஹ்மான்!

posted Jan 31, 2012, 9:59 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jan 31, 2012, 10:00 AM ]
இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு இந்த ஆண்டின் சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது அளிக்கப்பட்டது.

ரோஜா படத்துக்காக முதல் முறையாக பிலிம்பேர் விருது பெற்றார் ரஹ்மான். அதன் பிறகு ஜென்டில்மேன், காதலன், ஆர்டிபர்மன் சிறப்பு பிலிம்பேர் விருது, பம்பாய், ரங்கீலா, காதல் தேசம், மின்சாரக்கனவு, தில்சே, ஜீன்ஸ், தால், முதல்வன், அலைபாயுதே, லகான், பகத்சிங், சாதியா, ஸ்வதேஸ், ரங் தே பசந்தி, சில்லுனு ஒரு காதல், குரு (பின்னணி இசை), சிவாஜி த பாஸ்,ஜானே து யா ஜானே நா, ஜோதா அக்பர், டெல்லி 6, விண்ணைத்தாண்டி வருவாயா, விண்ணைத் தாண்டி வருவாயா (தெலுங்கு) ஆகிய படங்களுக்கு பிலிம்பேர் விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன.

இந்த முறை ராக்ஸ்டார் இந்திப் படத்தின் இசைக்காக அவருக்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டுள்ளது. இது அவர் பெறும் 29வது பிலிம்பேர் விருது.நேற்று முன்தினம் மும்பையில் நடந்த பிரமாண்ட விழாவில் இந்த விருதினை அவர் பெற்றுக் கொண்டார். இந்த விருதின் நுனியில் வைரங்கள் பதித்துக்கொடுத்திருந்தனர் பிலிம்பேர் விழா குழுவினர்.