நடிகர்களின் நட்சத்திர கிரிக்கெட் போட்டி

posted Nov 30, 2011, 9:10 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Nov 30, 2011, 9:11 AM ]
தமிழ், இந்தி, கன்னடம், மலையாள நடிகர்களின் நட்சத்திர கிரிக்கெட் போட்டி சார்ஜாவில் ஜனவரி 13-ந்தேதி துவங்குகிறது. பெங்களூர், மும்பை, சென்னை, திருவனந்தபுரம், ஐதராபாத்தில் இப்போட்டிகள் நடைபெற உள்ளன. இந்தி நடிகர்கள் அணிக்கு சல்மான்கானும், தமிழ் நடிகர்கள் அணிக்கு சூர்யாவும் கேப்டன்களாக உள்ளனர்.
 தெலுங்கு அணிக்கு ஜுனியர் என்.டி.ஆரும், மலையாள நடிகர்கள் அணிக்கு மோகன்லாலும் கேப்டன்களாக உள்ளனர். ஒவ்வொரு அணியும் பிரபல நடிகைகளை விளம்பர தூதுவர்களாக ஒப்பந்தம் செய்துள்ளன. இந்தி நடிகர்கள் அணிக்கு சோனாக்ஷி சின்ஹா, ஜெனிலியா, கங்கனா ரணாவத் ஆகியோர் தூதுவர்களாகியுள்ளனர்.
 
ஸ்ரேயா தெலுங்கு அணிக்கும், பாவனா, லட்சுமிராய் ஆகியோர் மலையாள அணிக்கும் தூதுவர்களாகியுள்ளனர். தமிழ் நடிகர்கள் கிரிக்கெட் அணியில் ஜெயம்ரவி, ஸ்ரீகாந்த், அப்பாஸ், ஜெய் உள்ளிட்ட பலர் இடம் பெற்று உள்ளனர். இந்த அணியின் தூதுவராக திரிஷாவை ஒப்பந்தம் செய்ய பேச்சு வார்த்தை நடக்கிறது. இதுகுறித்து திரிஷா கூறும்போது, "என்னை தூதுவராக ஒப்பந்தம் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆனால் நான் விஷாலுடன் "சமரன்'', ஜுனியர் என்.டி.ஆருடன் `தம்மு' ஆகிய இரு படங்களில் பிசியாக நடித்து வருகிறேன். கிரிக்கெட் அணியினர் எனது படப்பிடிப்பு தேதிகளை ஒதுக்கி கேட்பதால் சிக்கல் உள்ளது. நான் இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை என்றார்.