நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு இன்று காலை 10 மணி அளவில் சுக பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. நடிகை ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக உள்ளார் என்று என்றைக்கு அவரது மாமனார் அமிதாப் அறிவித்தாரோ அன்றில் இருந்து மீடியாக்களின் பார்வை ஐஸ்வர்யா மீது தான். நவம்பர் இரண்டாம் வாரத்தில் குழந்தை பிறக்கும் என்று மருத்துவர்கள் அறிவித்ததில் இருந்து ஐஸ்வர்யாவின் ரசிகர்களும், மீடியாக்களும் எப்பொழுது குழந்தை பிறக்கும், என்ன குழந்தை பிறக்கும் என்று டென்ஷனாக சுற்றிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் ஐஸ்வர்யவை பிரசவத்திற்காக மும்பையில் உள்ள செவன் ஹில்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. கடந்த 11-11-11ம் தேதி ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறக்கும் என்று ஆளாளுக்கு பந்தயம் கட்டினர். இறுதியில் இன்று அதிகாலை 4 மணிக்கு அவருக்கு பிரசவ வலி எடுத்தது. இதையடுத்து அவர் பிரசவ வார்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். 10 மணி அடிக்க சில நிமிடங்களே இருக்கையில் அவருக்கு சுக பிரசவத்தில் அழகிய பெண் குழந்தை பிறந்தது என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. இது குறித்து அபிஷேக், அமிதாப் ஆகியோர் டுவிட்டரில் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர். அபிஷேக் டுவீட்: எனக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது!!!!! வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. ஐஸ்வர்யாவும், குழந்தையும் நலமாக உள்ளனர். இருவரும் ஓய்வு எடுத்து வருகின்றனர். சந்தோஷம் தாங்க முடியவில்லை. தூங்க வேண்டும் என்று நினைத்தாலும் மகிழ்ச்சியில் தூக்கம் வரவில்லை. அமிதாப் டுவீட்: எனக்கு பேத்தி பிறந்திருக்காள் .... அபிஷேக் பச்சன் பெண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரது ஆசை நிறைவேறியுள்ளது. வாழ்த்துக்கள் ஐஸ், அபி |
சினிமா >