![]() அஜீத் குமாரின் பில்லா 2 படப்பிடிப்பு கோவாவில் நடந்து கொண்டிருக்கிறது. அங்கு சண்டை காட்சியொன்றை படமாக்கினர். அப்போது அஜீத்துக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து படப்பிடிப்பு குழுவைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது, பில்லா 2 படத்தின் சண்டை காட்சி படமாக்கப்பட்டது. அஜீத் குமார் ரவுடிகளை ஆக்ரோஷமாக அடித்து நொறுக்கும் காட்சி படமாக்கப்பட்டது. ரவுடிகளை அஜீத் பாட்டில்களால் அடிக்க வேண்டும். அதற்காக அவர் கையில் பாட்டில்கள் வைத்திருந்தார். அதை ரவுடிகள் மீது அடித்து உடைப்பது போன்று காட்சி எடுக்கப்பட்டது. அப்போது பாட்டில் உடைந்து சிதறியதில் அஜீத் கையி்ல கண்ணாடி துண்டுகள் குத்தி ரத்தம் வந்தது. உடனடியாக அவருக்கு முதலுதவி கொடுத்தனர். சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு அஜீத் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என்றார். |
சினிமா >