தனுஷின் மயக்கம் என்ன பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

posted Nov 17, 2011, 6:39 PM by Sathiyaraj Kathiramalai   [ updated Nov 17, 2011, 6:41 PM ]
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘மயக்கம் என்ன’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இப்படம் வரும் நவம்பர் 25-ஆம் தேதி திரைக்கு வரும் என செல்வராகவன் தெரிவித்தார். இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக தெலுங்கு நடிகை ரிச்சா கங்கோபாத்யாய் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையில் அனைத்துப் பாடல்களையும் தனுஷ் மற்றும் செல்வராகவனும் இணைந்து எழுதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.