ஆயிரத்தில் ஒருவன் பாகம் II

posted Nov 12, 2011, 9:34 AM by Sathiyaraj Kathiramalai
 
பருத்திவீரன்’ படத்தினை தொடர்ந்து கார்த்தி நீண்ட நாட்களாக நடித்த படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென் மற்றும் பலர் நடிக்க செல்வராகவன் இயக்கி இருந்தார். ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து இருந்தார்.
இந்த திரைப்படம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை. ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் முடியும் போது ” பயணம் தொடரும் ” என்று போட்டிருந்ததால், செல்வராகவன் எப்போது வேண்டுமானலும் ‘ஆயிரத்தில் ஒருவன்’ இரண்டாம் பாகம் இயக்கலாம் என்று தமிழ் திரையுலகில் பேச்சுகள் நிலவி வந்தன.
இத்தகவலை நிரூபிக்கும் வகையில் செல்வராகவன் தனது டிவிட்டர் இணையத்தில் “ ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்திற்கான கதை தயாராகி விட்டது. இன்னும் இரண்டு நாட்களில் அக்கதையை மேலும் மெருக்கேற்றி தயார் செய்து விடுவேன். விரைவில் இதற்கான பணிகளை தொடங்குவேன் “ என்று அறிவித்துள்ளார்.

Post to Facebook