செல்லப்பெயர் 'Beti B' : அபிஷேக் பச்சன் அறிவிப்பு

posted Nov 21, 2011, 6:18 PM by Sathiyaraj Kathiramalai   [ updated Nov 22, 2011, 7:01 AM by Sathiyaraj Thambiaiyah ]
பாலிவூட் திரையுலகின் நட்சத்திர ஜோடியான அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராய் தம்பதியினருக்கு பிறந்த பெண்குழந்தைக்கு, 'Beti B' என செல்லப்பெயர் (Nickname) சூட்டுவதற்கு முடிவு செய்துள்ளார்கள். Beti என்றால், ஹிந்தி மொழியில் 'மகள்' என்று அர்த்தமாம். சக நடிகை ஷாஹனா கௌஸ்வாமி, இந்த பெயரை பரிந்துரை செய்துள்ளார். ஏற்கனவே சீனியர் B, ஜூனியர் B என நாம் இருவர் இருப்பதால் மகளுக்கு 'Beti B' என செல்லப்பெயர் வைத்திருப்பதாக அபிஷேக் பச்சன் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.