வியாழக்கிழமை கோச்சடையான் பட பூஜை

posted Jan 16, 2012, 8:23 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Jan 16, 2012, 8:24 AM ]
ரஜினிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் “ராணா” படம் நிறுத்தப்பட்டது. அது வரலாற்று படம் என்பதால் குதிரை சவாரி, வாள் சண்டை போன்றவற்றில் ரஜினி நடிக்கவேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது. டாக்டர்கள் அதுபோன்ற காட்சிகளில் நடிக்கக்கூடாது என அறிவுறுத்தியதால் படம் கைவிடப்பட்டது. அதற்கு பதில் “கோச்சடையான்” என்ற படத்தில் ரஜினி நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது.
 
இப்படத்தை ரஜினி மகள் சவுந்தர்யா இயக்குகிறார். கே.எஸ். ரவிக்குமார் டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார். ஏ.ஆர். ரகுமான் இசை அமைக்கிறார். இதில், கதாநாயகியாக நடிக்க வித்யாபாலன், தீபிகா படுகோனே, அனுஷ்கா, கத்ரினா கயூப் போன்றோர் பரிசீலிக்கப்பட்டனர்.
 
இறுதியில் கத்ரினா தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினியின் தங்கை வேடத்தில் சினேகா நடிக்கிறார். “மிருகம்” ஆதியும் முக்கிய கேரக்டரில் வருகிறார். கோச்சடையான படப்பிடிப்பு வருகிற
19-ந்தேதி வியாழக்கிழமை ஏ.வி.எம். ஸ்டூடியோவில் உள்ள பிள்ளையார் கோவிலில் துவங்குகிறது.
 
முன்னதாக கோவிலில் சிறப்பு பூஜை நடக்கிறது. இதில் திரையுலக முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கிறார்கள். பின்னர் ரஜினி, சினேகா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்படுகிறது. அடுத்த வாரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பங்களா ஒன்றில் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்கிறது.