ரஜினியின் உடல் நிறத்திற்கு ஏற்ப தீபிகா

posted Feb 17, 2012, 8:27 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Feb 17, 2012, 8:28 AM ]
ரஜினி நடிக்கும் கோச்சடையான் பட வேலைகளை துவங்கியுள்ளன. இதில் ரஜினி ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். தாய்-தந்தை கேரக்டரில் ருக்மணி மற்றும் சரத்குமார், ஆதி, நாசர் போன்றோரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்குகிறார்.

நடிகர் நடிகையருக்கு கோச்சடையான் பட கெட்டப்பில் மேக்கப் போட்டு இரு வாரங்களாக போட்டோ சூட்டிங் நடந்தது. தீபிகா படுகோனே சிவப்பு என்பதால் ரஜினிக்கு ஜோடி பொருத்தமாகும் வகையில் கிராபிக்சில் அவரது நிறம் கருப்பாக்கப்படுகிறது.

இதற்காக அவர் சென்னை வந்தார். தீபிகா படுகோனேயை படம் எடுத்து ரஜினியை போல நிறம் மாற்றும் பணிகள் நடந்தன. இப்படத்தில் ரஜினியின் ருத்ர தாண்டவ நடனம் இடம் பெறுகிறது. இதையும் உயர் தொழில்நுட்பத்தில் படமாக்கின்றனர்.

பெரும் பகுதி படப்பிடிப்பு லண்டனில் நடக்கிறது. இதற்காக படக்குழுவினர் அங்கு புறப்பட்டுச் செல்கின்றனர். கோச்சடையான் படம் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு மன்னனை பற்றிய கதை. சரித்திர கால அரங்குகள் அமைத்து படப்பிடிப்பை நடத்துகின்றனர்.