நடிகை ஹன்சிகா மோத்வானி குறித்து அவ்வப்போது ஏதாவது ஒரு செய்தி வெளியாகிக்
கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு அவர் நடித்த மாப்பிள்ளை, எங்கேயும் காதல்
மற்றும் வேலாயுதம் அவருக்கு ஒன்றும் பெரிய அளவில் பெயர் வாங்கித்
தரவலில்லை. இந்த ஆண்டு ஒரு கல், ஒரு கண்ணாடி, வேட்டை மன்னன் ஆகிய படங்களில்
நடிக்கிறார். நடிகை ஹன்சிகா மோத்வானி என்றால் நம் நினைவு்ககு வருவது அவரது கொழுக், மொழுக் உருவம் தான். இனி கொழு, கொழு பொம்மை மெலியப் போகிறது. ஆம் அண்மையில் ஹன்சிகா தனது உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்பை அதிநவீன சிகிச்சை மூலம் குறைத்துள்ளாராம். கஷ்டப்பட்டு குறைக்கும் கொழுப்பு மறுபடியும் ஏறாமல் இருக்க அம்மணி பார்த்து, பார்த்து சாப்பிடுகிறாராம். தீவிர டயட்டில் இருக்கிறாராம். விரைவில் ஒல்லிப்பாச்சான் ஹன்சிகாவை பார்க்கலாம். ஆனால் அவருக்கு அழகே கொழுக், மொழுக் உருவம் தானே. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? 'கொழு கொழு'வைக் கைவிட்டால் 'கிளுகிளு' ஏறும் என்றால் ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே...! |
சினிமா >