'குறுகிய காலத்திலேயே அகில உலக பேமஸ்' ஆகிவிட்ட தனுஷின் கொலவெறி புகழ் '3'
படம் உலகமெங்கும் தமிழ் - இந்தியில் வெளியாகிறது. வெளிநாடுகளில் ஆங்கில சப்
டைட்டில் போடப்பட்டு வெளியாக உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளும் நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் '3' படம் குறித்து பெரிய எதிர்ப்பார்ப்பு கிளம்பியுள்ளது. காரணம் இந்த்ப படத்தில் இடம்பெற்றுள்ள தனுஷ் பாடும் கொல வெறி பாட்டுதான் என்பது சொல்லாமலே புரிந்திருக்கும். படம் இப்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது. பிப்ரவரி 3-ம் தேதி வெளியாகவிருந்த இந்தப் படம், இப்போது மார்ச் இறுதி வாரம் அல்லது ஏப்ரல் முதல் வாரம் வெளியாகவிருக்கிறது. இந்தத் தகவலை தனுஷ் சமீபத்தில் வெளியிட்டார். 3 படத்துக்கு ஐஸ்வர்யா தனுஷின் நெருங்கிய உறவினர் அனிருத் இசையமைத்துள்ளார். |
சினிமா >