ஜெய், அஞ்சலி காதல் தீவிரம், திருமணத்திற்கு ரெடி

posted Nov 20, 2011, 8:10 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Nov 20, 2011, 8:11 AM ]
நடிகர் ஜெய்யும், நடிகை அஞ்சலியும் தீவிரமாக காதலித்து வருவதாகவும் தற்போது 2வது முறையாக ஜோடி சேர்ந்துள்ள புதிய படத்தில் நடித்து முடித்த பிறகு திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கோலிவட்டிலிருந்து சூடான தகவல் வெளியாகியுள்ளது.

திரையுலகில் அவ்வப்போது ஹீரோ, ஹீரோயினை இணைத்து காதல், திருமண வதந்திகள் கிளம்புவது சகஜம்தான். சில வேளைகளில்இது உண்மையாகும், பல நேரங்களில் பொய்த்துப் போகும்.

அந்த வகையில் தற்போது லேட்டஸ்டாக கோலிவுட்டில் உலா வரும் ஒரு செய்தி, ஜெய்யும், அஞ்சலியும் காதலிக்கிறார்கள் என்பதுதான்.இருவரும் சேர்ந்து எங்கேயும் எப்போதும் படத்தில் ஜோடி போட்டனர். அது முதலே இருவரையும் இணைத்து செய்திகள் வரத் தொடங்கி விட்டன. ஆனால் தங்களுக்குள் காதல் கிடையாது, ஜஸ்ட் பிரண்ட்ஸ் என்று இருவரும் கூறி வருகின்றனர்.

ஆனால் இருவருமே நெருங்கிப் பழகுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்களாம், ஜோடியாக பல இடங்களுக்குப் போய் வருகிறார்களாம். மேலும் புதிதாக இருவரும் சேர்ந்து புதுப் படம் ஒன்றில் ஜோடி போடவுள்ளனர். இந்தப் படத்தில் அஞ்சலியை தனக்கு ஜோடியாக போடுமாறு ஜெய்தான் பரிந்துரைத்தாராம்.

இவர்களுக்கிடையிலான காதல் வலுத்து விட்டதாம். புதிய படத்தை முடித்ததும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கோலிவுட்டில் படு சூடாக பேசிக் கொள்கிறார்கள்.

இது சினிமாவில் வருவது போன்ற காதலா அல்லது உண்மையிலேயே நட்புதானா என்பதை போகப் போகத் தெரிந்து கொள்ளலாம்.