ஜெனிலியா ரிதேஷ்தேஷ் திருமணம்

posted Jan 27, 2012, 8:55 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Jan 27, 2012, 8:56 AM ]
ஜெனிலியாவுக்கும் இந்தி நடிகர் ரிதேஷ்தேஷ் முக்குக்கும் மும்பையில் வருகிற 4-ந்தேதி திருமணம் நடக்கிறது. மறுநாள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக அங்குள்ள ஹயாத் ஸ்ரீகென்சி நட்சத்திர ஓட்டலில் அறைகள் மற்றும் அரங்குகளை மூன்று நாட்கள் வாடகைக்கு எடுத்துள்ளனர்.

மாப்பிள்ளை அழைப்பு மற்றும் மணமகள் மெகந்தி அலங்கார நிகழ்ச்சிகள் நாளை மறுநாள் (29-ந்தேதி) நடக்கின்றன. திருமணத்தையொட்டி நடிகர், நடிகைகளுக்கு ஜெனிலியாவும் ரிதேசும் இணைந்து விருந்து கொடுத்தனர். ஓட்டலில் நடந்த இந்த விருந்து நிகழ்ச்சியில் நடிகர், நடிகைகள் குடும்பத்தோடு வந்தார்கள்.

இந்தி நடிகைகள் தீபிகா படுகோனே, ஜெரினாகான், நேகா துபியா, ஜியாகான், சமீராரெட்டி, சுஷ்மாரெட்டி, பெராகான், அமிஷா படேல், நடிகர்கள் கரன்ஜோகர், ஜாயித்கான், சஞ்சய்தத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அனைவரும் ஜெனிலியாவுக்கும் ரிதேசுக்கும் வாழ்த்து தெரிவித்தனர். விருந்தில் ஜெனிலியாவும் ரிதேஷ¨ம் காதல் உணர்வு ததும்ப மகிழ்ச்சியோடு இருந்ததாக நடிகைகள் தெரிவித்தனர்.

நெருக்கமாக கட்டி அணைத்தப்படி நின்று போட்டோவுக்கும் போஸ் கொடுத்தனர். இருவரும் ஆறு ஆண்டு களாக காதலித்தனர். இரு வீட்டு பெற்றோரும் காதலை எதிர்த்ததால் அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியில் நீண்ட நாட்களாக ஈடுபட்டனர். கடந்த மாதம்தான் பெற்றோரிடம் இருந்து சம்மதம் கிடைத்தது. உடனடியாக திருமண அறிவிப்பை வெளியிட்டனர்.