பொங்கல் ரிலீஸ் ரேஸில் சேர்ந்த 'கொள்ளைக்காரன்!'

posted Jan 7, 2012, 8:33 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Jan 7, 2012, 8:33 AM ]
இந்த பொங்கலுக்கு இரண்டு படங்கள்தான் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அந்த ரேஸில் புதிதாக சேர்ந்துள்ளது விதார்த் நடித்துள்ள 'கொள்ளைக்காரன்' படம்.

இந்தப் பொங்கலுக்கு விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் நடித்த நண்பன், ஆர்யா - மாதவன் நடித்த வேட்டை ஆகிய படங்கள் மட்டும் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தியேட்டர்களும் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது புதிதாக இணைந்துள்ளது கொள்ளைக்காரன் படம்.

இந்தப் படத்தில் விதார்த் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். முவுக்க முழுக்க கிராமத்துப் பின்னணியில், கலகலப்பாக எடுக்கப்பட்டுள்ள படம் இது என்பதால், பொங்கல் ரிலீஸில் இந்தப் படத்துக்கு உரிய கவுரவம் கிடைக்கும் என நம்புகிறார் இயக்குநர் தமிழ்ச் செல்வன்.

வைரமுத்து பாடல்களை எழுத, ஷோகன் என்பவர் இசையமைத்துள்ளார்.


பொங்கலுக்கு ஒரு நாள் முன்பு 250 திரையரங்குகளில் தமிழகமெங்கும் வெளியாகிறது கொள்ளைக்காரன்.