மம்பட்டியான் படத்தில் வடிவேல்

posted Dec 7, 2011, 8:40 AM by Sathiyaraj Kathiramalai
‘அப்பா… நல்லவேளை படத்துல வடிவேலு இருக்காரு…’ இது, படம் மொக்கையாக இருந்தாலும் வடிவேலு படத்தில் இருந்தால் ரசிகர்கள் வாய்விட்டு சொல்லும் வார்த்தைகள். 2011 தேர்தலில் வடிவேலுவை நிஜமாகவே காமெடி பீஸாக பேசவிட்டு வேடிக்கை பார்த்தார்கள். தேர்தல் முடிவுகள் அவரை ஓரமாய் உட்கார வைத்துவிட்டன. வடிவேலு காமெடியில் அடிக்கடி படங்கள் வந்து கொண்டிருக்க சமீபகாலமாக எந்த படமும் வராதது சினிமா குறிப்பாக காமெடியை விரும்பும் ரசிகர்களுக்கு சற்றே அலுப்பை ஏற்படுத்தியது. ‘எப்படா வடிவேலு வாருவாரு’ என்று எதிர்பார்த்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வருகிறார் வடிவேலு மம்பட்டியான் படத்தில். பிரசாந்த் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் வடிவேலுவின் காமெடி டிராக்தான் இடம்பெறுகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து வடிவேலுவின் காமெடியில், ‘குலசேகரனும் கூலிப்படையும்’ என்ற படம் வெளிவரவிருக்கிறது.