மார்ச் 15-ம் தேதி பில்லா -2 ட்ரெயிலர்!

posted Mar 1, 2012, 9:54 AM by Sathiyaraj Thambiaiyah
அஜீத் நடிக்கும் பில்லா 2 படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெயிலர் வரும் மார்ச் 15-ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.

ரஜினியின் பில்லா படத்தை அஜீத்தை வைத்து ரீமேக் செய்து வெளியிட்டு வெற்றி கண்டனர். இப்போது அந்தப் படத்துக்கு முன்கதையாக பில்லா-2வை தயாரிக்கின்றனர். இதில் பில்லா ஏன் உருவானான் என்ற கதை சொல்லப்படுகிறது.

தாதா மற்றும் நடுத்தர நல்ல இளைஞன் என இரு கெட்டப்களில் தோன்றுகிறார் அஜீத். நாயகியாக பார்வதி ஓமனகுட்டன் நடிக்கிறார். கமலின் உன்னைப்போல் ஒருவன் படத்தை இயக்கிய சக்ரி டோலட்டி இப்படத்தை இயக்குகிறார்.

பில்லா-2 பட டிரெய்லர் மற்றும் பாடலை வரும் மார்ச் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர். மார்ச் 15-ம் தேதி இந்த விழா நடக்கும் எனத் தெரிகிறது.

இதற்கிடையே படத்தின் புதிய டிசைன்கள் மற்றும் போஸ்டர்களை படத்தின் தயாரிப்பாளர் சுனிர் கேத்ரபால் மூலம் இன்று வெளியாகியுள்ளது.
Comments