மூன்றில் ரஜினி

posted Feb 25, 2012, 9:06 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Feb 25, 2012, 9:07 AM ]
தனுஷ் - ஸ்ருதி ஜோடியாக நடித்த “3” படம் விரைவில் ரிலீசாகிறது. தனுஷ் மனைவி ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். கஸ்தூரி ராஜா தயாரிக்கிறார். இதில் படத்தின் தலைப்புக்கு ஏற்ப தனுஷ், ஸ்ருதி தவிர 3-வது நபராக ரஜினி நடித்துள்ளதாக தகவல் வெளியானது.

இது குறித்து கஸ்தூரி ராஜாவிடம் கேட்ட போது 3-வது நபர் யார் என்பதை இப்போது சொல்ல முடியாது அது சஸ்பென்ஸ் என்றார். ஆனாலும் படத்துக்கு டைட்டில் மிகவும் பொருத்தமாக இருப்பதாக அவர் தெரிவித்தார். இப்படத்தில் தனுஷ் எழுதி பாடிய கொலை வெறி பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ளது.

இதனால் படத்தை ரூ.50 கோடி , ரூ.60 கோடி என பலர் விலை பேசுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து கஸ்தூரி ராஜா மேலும் கூறும் போது இன்னும் வியாபாரம் முடியவில்லை. கொலை வெறி பாடல் படத்தை அதிக விலைக்கு கேட்டு எங்களை பலர் அணுகி இருப்பது உண்மைதான். இப்போதுதான் பிசினஸ் பேச துவங்கியுள்ளோம் என்றார்.

3 படம் மார்ச் 30-ந்தேதி ரிலீசாகும் என்றும் கூறினார். தெலுங்கு, இந்தி மொழிகளிலும் 3 படம் ரிலீசாகிறது. தமிழில் 300 முதல் 400 பிரிண்ட்கள் போடப்படுகின்றன. ஐஸ்வர்யா மிகுந்த ஈடுபாட்டோடு கடுமையாக உழைத்து படத்தை சிறப்பாக இயக்கியுள்ளார் என்றும் கஸ்தூரி ராஜா தெரிவித்தார். இப்படத்துக்கு ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி சவுண்ட் என்ஜினீயராக பணியாற்றியுள்ளார்.