நண்பன்' திரைப்படம் இன்று ரிலீஸ் விஜய்க்கு பாலபிஷேகம்

posted Jan 12, 2012, 8:31 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Jan 12, 2012, 8:32 AM ]
இளையதளபதி விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் இணைந்து நடித்துள்ள 'நண்பன்' திரைப்படம் இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'எந்திரன்' படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்கியுள்ள இத்திரைப்படம், பாலிவுட்டில் அபார வெற்றி பெற்ற 'த்ரீ இடியட்ஸ்' படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். 
 
இப்படத்தில் விஜயக்கு ஜோடியாக இலியானா நடித்துள்ளார். இப்படம் இன்று திரைக்கு வந்ததால் விஜயின் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்து வருகின்றனர். சென்னையில் ஆல்பர்ட், தேவி, சத்யம், காசி உள்ளிட்ட பிரபல திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.
 
ஆல்பர்ட் தியேட்டரில் அமைக்கப்பட்டுள்ள விஜயின் பேனருக்கு அவரது ரசிகர்கள் பாலபிஷேகம் செய்தனர். மேளம் அடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். நான்கு நாட்களுக்கு முன்பே டிக்கெட்டை ரிசர்வ் செய்த ரசிகர்கள் இன்று கூட்டமாய் தியேட்டரில் படம்பார்க்க வந்திருந்தனர்.
 
தேவி தியேட்டரில் கூட்டம் அலை மோதியது. சத்யம் திரையரங்கில் ஹவுஸ்புல் ஆகிவிட்டது. இளைய தளபதி விஜய், ஸ்ரீகாந்த்,   இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட  நண்பன் படக் குழுவினர்  ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து சத்யம் திரையரங்கில் 'நண்பன்' படத்தை பார்த்து ரசித்தனர்.