நடிகை ரீமா சென் - ஷிவ்கரன் சிங் திருமணம் நாளை டெல்லியில் நடக்கிறது!

posted Mar 10, 2012, 9:28 AM by Sathiyaraj Thambiaiyah
தனது நீண்ட நாள் காதலர் ஓட்டல் அதிபர் ஸிவ் கரன்சிங்கை நாளை மணக்கிறார் பிரபல நடிகை ரீமா சென்.

மின்னலே படம் மூலம் தமிழில் அறிமுகமாக முன்னணி நடிகையாகத் திகழ்ந்தவர் ரீமா சென். கொல்கத்தாவை சேர்ந்த இவர், தெலுங்கு, வங்காளம் மற்றும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் இவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன்தான் கடைசிப் படம். ராஜபாட்டையில் ஒரு பாட்டுக்கு ஆடிவிட்டுபப் போனார்.

வாய்ப்புகள் பெரிதாக இல்லாத நிலையில், ரீமாசென்னுக்கும், ஷிவ் கரன்சிங்குக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஷிவ்கரன்சிங் டெல்லியில் ஓட்டல்கள் மற்றும் 'பார்' நடத்தி வருகிறார். கடந்த 2 வருடங்களாக இருவரும் காதலித்து வந்தனர்.


இரண்டு பேரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து, பெற்றோர் சம்மதத்துடன் மோதிரம் மாற்றி நிச்சயம் கொண்டனர்.

நிச்சயம் செய்தபடி, ரீமாசென்னுக்கும், ஷிவ் கரன்சிங்குக்கும் டெல்லியில், ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு திருமணம் நடக்கிறது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், மற்றும் நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள்.

ரீமாசென்னின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நடிகர் ராம்ஜி, நடிகை சோனியா அகர்வால் உள்ளிட்ட தமிழ் பல திரையுலக பிரமுகர்கள் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார்கள்.

திருமணத்துக்குப் பிறகு நடிப்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று முன்பே ரீமா சென் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
Comments