மீண்டும் நயன்தாரா பிரபு தேவா மோதல்

posted Jan 9, 2012, 8:49 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Jan 9, 2012, 8:50 AM ]
நயன்தாராவுக்கும் பிரபு தேவாவுக்கும் 2009-ல் காதல் மலர்ந்தது. அப்போதே திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். ஆனால் இதுவரை திருமணம் நடக்காமல் இழுத்தடிப்பது சந்தேகங்களை கிளப்பியுள்ளது. நயன்தாரா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். பிரபு தேவாவை மணப்பதற்காக ஆர்யசமாஜத்துக்கு சென்று காயத்ரி மந்திரம் சொல்லி இந்து மதத்துக்கு மாறினார்.
 
சினிமாவுக்கும் முழுக்கு போட்டு விட்டார். அவர் கடைசியாக நடித்த படம் ஸ்ரீராம ராஜ்ஜியம் சீதை வேடம் என்பதால் அப்படத்தில் நடித்தார். படப்படிப்பு இறுதி நாளில் இனி நடிக்க மாட்டேன் என சொல்லி கண்ணீருடன் விடை பெற்ற படங்கள் இன்டர்நெட்டில் வந்தன. தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தும் நடிக்கவில்லை.
 
இதையடுத்து கடந்த வருடம் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கிடையில் முதல் மனைவி ரம்லத் குழந்தைகளை பிரபுதேவா தன்னுடன் அழைத்து வைத்து பாசம் காட்டுவதாகவும் நயன்தாராவுக்கு இது பிடிக்காததால் இருவருக்கும் தகராறு மூண்டுள்ளதாகவும் கிசுகிசுக்கள் வந்தன.
 
கேரளாவில் தனது வீட்டுக்குள் பிரபுதேவாவை அனுமதிக்காமல் பலமணி நேரம் வெளியிலேயே நிறுத்தி வைத்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் அவை வதந்திகள் என்றும் விரைவில் நயன்தாராவுடன் திருமணம் நடக்கும் என்றும் பிரபுதேவா அறிவித்தார். அதன்படி திருமண ஏற்பாடுகள் நடந்ததாக தெரியவில்லை.
 
பிரபுதேவா தற்போது அக்ஷயகுமாரை வைத்து இந்திப்படம் இயக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளார். அவர் திருமணத்துக்கு காலம் கடத்துவதால் நயன்தாரா அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. தெலுங்கில் ஐந்து பெரிய கம்பெனிகள் தங்கள் படங்களில் நடிக்க நயன்தாராவை அணுகி உள்ளன. மீண்டும் நடிக்கலாமா என்று அவர் யோசிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.