ஒஸ்தி படத்தை திரையிடுவதில் சிக்கல்

posted Dec 2, 2011, 8:58 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Dec 2, 2011, 8:59 AM ]
இந்தியில் சல்மான்கான் நடித்து ஹிட்டான “டபாங்” படம் தமிழில் சிம்பு நடிக்க “ஒஸ்தி” என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. தரணி இயக்கியுள்ளார். இப்படம் வருகிற 8-ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
இந்த நிலையில் ஒஸ்தி படத்தை திரையிட மாட்டோம் என தியேட்டர் அதிபர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. இந்த படத்தின் “சாட்டி லைட்” உரிமை பெற்றுள்ள டி.வி. நிறுவனம் தங்களுக்கு தர வேண்டிய டெபாசிட் தொகையை திருப்பி தர வேண்டும் என்றும் பணத்தை தராவிட்டால் ஒஸ்தி படத்தை திரையிட மாட்டோம் என்றும் தயாரிப்பாளர் சங்கத்தினர் அறிவித்து உள்ளனர்.
 இது குறித்து ஒஸ்தி பட தயாரிப்பாளருக்கும் தியேட்டர் அதிபர் சங்கத்துக்கும் இடையே தொடர்ந்து பேச்சு வார்த்தைகள் நடந்தும் முடிவு ஏற்படவில்லை. இன்னும் பேச்சு வார்த்தை நடப்பதாகவும் மாலை முடிவு தெரியும் என்றும் தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்