எதிர்வரும் பொங்கலுக்கு நண்பன், வேட்டை ஆகிய படங்கள் வெளியிடப்படுகின்றது. நண்பன் படத்தில் விஜய், இலியானா ஜோடியாக நடித்துள்ளனர். சத்யராஜ், ஸ்ரீகாந்த், ஜீவா ஆகியோரும் இப்படத்தில் இருப்பதால் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது. ஷங்கர் இயக்கியுள்ளார். இந்தியில் ஹிட்டான 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கே நண்பன். கல்லூரியில் பயிலும் மூன்று நண்பர்கள் பற்றிய கதை. இதன் பாடல் சி.டி.யை சமீபத்தில் கோவையில் விழா நடத்தி வெளியிட்டனர். தணிக்கை குழுவினர் படத்தை பார்த்து யு சான்றிதழ் அளித்துள்ளனர். பொங்கலுக்கு மூன்று நாட்கள் முன்னதாகவே ஜனவரி 12-ந் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்கின்றனர். வேட்டையும் மாதவன், ஆர்யா என இரு ஹீரோக்கள் நடிப்பில் தயாராகியுள்ள படம். நாயகிகளாக சமீராரெட்டி, அமலா பால் நடித்துள்ளனர். லிங்குசாமி இயக்கியுள்ளார். வருகிற 14-ந்தேதி இப்படம் ரிலீசாகிறது. |
சினிமா >