![]() கொலை வெறி பாடல் பிரதமர் மன்மோகன் சிங்கையும் எட்டியுள்ளது. இதையடுத்து பிரதமர் விருந்தில் பங்கேற்க தனுசுக்கு அழைப்பு வந்துள்ளது. ஜப்பானிய பிரதமர் யோசி கியோ நோடாவுக்கு டெல்லி ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தனது வீட்டில் மன்மோகன் சிங் நாளை விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் பங்கேற்கத்தான் தனுசுக்கு அழைப்பு வந்துள்ளது. பாடல் பிரபலமானது குறித்து தனுஷ் கூறும்போது, கொலை வெறி பாடல் எனக்கு நிறைய கதவுகளை திறந்து விட்டுள்ளது. இந்த பாடல் வெற்றி பெறுவதற்கு மூன்று காரணங்கள் உள்ளன. பாடலில் உள்ள ஆங்கில வரிகள் ஒவ்வொருவருக்கும் தொடர்பு உள்ளவை, நகைச் சுவை மற்றும் பாடலில் உள்ள கருத்துக்களும் சாதாரண மக்களையும், இளைஞர்களையும் கவர்ந்துள்ளது |
சினிமா >