வீட்டுக்கு ரஜினியின் வருகையால் இன்ப அதிர்ச்சியில் ஜெயம் ரவி

posted Dec 1, 2011, 8:54 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Dec 1, 2011, 8:55 AM ]
ஜெயம் ரவி வீட்டுக்கு ரஜினி திடீரென சென்றார். ரஜினியும் ஜெயம் ரவி தந்தை எடிட்டர் மோகனும் நீண்டகாலமாக குடும்ப நண்பர்களாக உள்ளனர். ரஜினி நடித்த பல படங்களுக்கு மோகன் எடிட்டராக பணியாற்றி உள்ளார்.
 எனவே எடிட்டர் மோகனின் 70-வது பிறந்தநாளையொட்டி ஜெயம் ரவி வீட்டுக்கு நேரில் சென்று ரஜினி வாழ்த்தினார். இதுகுறித்து ஜெயம் ரவி கூறும்போது, அப்பாவுக்கு வாழ்த்து சொல்ல ரஜினி சார் திடீரென எங்கள் வீட்டுக்கு வந்தார். அவர் வருகை எங்களுக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றார்.