ரஜினிகாந்த் போல் அவரிடமே ஸ்டைலாக நடித்து அசத்துகிறார்களாம் ஐஸ்வர்யா தனுஷின் மகன்கள் ,யாத்ராவும்,லிங்காவும். ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு யாத்ரா,லிங்கா என்று 2 மகன்கள் உள்ளனர். அந்த இரண்டு குழந்தைகளும் டிவிடியில் தாத்தா ரஜினிகாந்த் படங்களைப் பார்ப்பது என்றால் மிகவும் பிரியமாம். ரஜினியின் ஸ்டைலை உன்னிப்பாக கவனித்துப் பார்க்கிறார்களாம். தாத்தாவிடம் சென்று அவர் ஸ்டைலை அவருக்கே செய்து காட்டி அசத்துகிறார்களாம். பிஞ்சுப் பிள்ளைகள் தன்னைப் போன்று ஸ்டைல் செய்வதைப் பார்த்து ரஜினி பூரித்துப் போகிறாராம். தனக்கு நெருக்கமானவர்களிடம் என் பேரன்மார்கள் என்னைப் போன்று ஸ்டைல் செய்து காட்டுகிறார்கள் என்று சொல்லி சொல்லி பெருமிதப்படுகிறாராம். தாத்தா ரஜினியும் அப்பா தனுஷும் நடிகர்கள். அம்மா இயக்குனர் சித்தி தயாரிப்பாளர் தந்தை வழி தாத்தா கஸ்தூரிராஜா இயக்குனர், பெரியப்பா செல்வராகவன் இயக்குனர் இப்படி குடும்பமே கலைக்குடும்பமாக இருக்கையில் யாத்ராவுக்கும்லிங்காவுக்கும் நடிக்க சொல்லியா கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றனர். |
சினிமா >