ராஜபாட்டை டிசெம்பர் 23 இல்

posted Dec 13, 2011, 9:07 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Dec 13, 2011, 9:08 AM ]
விக்ரம் நடித்துள்ள ராஜபாட்டை நேற்று தணிக்கை செய்யப்பட்டது. இந்தப் படத்துக்கு தணிக்கைக் குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. பிரசாத் வி பொட்லூரி தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கியுள்ள படம் ராஜபாட்டை. அந்நியனுக்குப் பிறகு விக்ரம் படங்கள் என்றாலே வருடக் கணக்கில் இழுக்கும் என்ற சூழல் இருந்தது. அந்த நினைப்பை மாற்றியது தெய்வத் திருமகள். இப்போது, அதைவிட வேகமாக படத்தை முடித்து வெளியீட்டுக்குக் கொண்டு வந்துள்ளார் சுசீந்திரன்.

யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் ஏற்கெனவே பெரிய ஹிட்டாகியுள்ளன. குறிப்பாக வில்லாதி வில்லன் பாடல் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் படம் சென்சார் செய்யப்பட்டு யு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் வரும் டிசம்பர் 23-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. தமிழகத்தில் விக்ரம் படத்துக்கு இதுவரை இல்லாத அளவு அதிக திரையரங்குகளில் ராஜபாட்டை வெளியாகிறது. தெலுங்கில் டிசம்பர் 30ம் தேதி வெளியாகிறது.