ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி சிறப்பு ஏற்பாடுகள்

posted Dec 11, 2011, 8:03 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Dec 11, 2011, 8:03 AM ]
ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். சென்னை மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் நாளை (12-ந் தேதி) தாம்பரம் செல்வ விநாயகர் கோவில், பென்ட்நகர் வேளாங்கண்ணிமாதா கோவில், சைதை இளங்காளியம்மன் கோவில் தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் மயிலை ராகவேந்திர கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் அன்னதானம் வழிபாடுகள் நடக்கின்றன.
மாவட்ட தலைவர் என்.ராம்தாஸ், செயலாளர் ஆர். சூர்யா, பொருளாளர் கே.ரவி, ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். திருவேற்காடு கோவிலில் காலை 4.30 மணிக்கு கோமாதா பூஜையும், ராகவா லாரன்சின் ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகளுக்கு இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சியும், சூளைமேடு ரவிச்சந்திரன், வீராசம்பத் ஆகியோர் ஏற்பாட்டில் நடக்கிறது.

மவுண்ட் ரோடு தர்காவில் தொழுகையும் பிரியாணி வழங்குதலும் நடக்கிறது. முஜிபுர்ரகுமான், தி.நகர்அலி அய்யனார், ஆகியோர் செய்து உள்ளனர். ராகவா லாரன்ஸ் குழந்தைகள் காப்பகத்திலும் உணவு வழங்கப்படுகிறது. 13-ந் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நல உதவிகள் வழங்கப்படுகின்றன.இதில் டைரக்டர் எஸ்.பி.முத்து ராமன், நடிகர் விஜயகுமார், தயாரிப்பாளர் தாணு, ராகவா லாரன்ஸ், நடிகர் கள் செந்தில், சின்னி ஜெயந்த், கருணாஸ், சிவகார்த்திகேயன் வாசு, விக்ரம் ரசிகர் மன்ற நிர்வாகிகள் என்.ராம்தாஸ், ஆர்.சூர்யா, கே.ரவி பங்கேற்கின்றனர்.

ரஜினி பிறந்த நாளையொட்டி காமராஜர் அரங்கில் ஏழை பெண்களுக்கு தையல் எந்திரம், ஊனமுற்றோருக்கு 3 சக்கர சைக்கிள் போன்றவை வழங்கப்பட்டன. இதில், டைரக்டர்கள் எஸ்.பி. முத்துராமன், பி.வாசு, கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் கராத்தே தியாகராஜன், தொழில் அதிபர் சந்தானம் ஆகியோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தி.நகர் எஸ்.பழனி, கோட்டூர் மாரி, ராஜி, கலை, ராஜமூர்த்தி, ஜோதி, ஸ்ரீதர், செல்வமணி, ரஜினி ரவி, ராஜகோபால், ரஜினி முருகன், ரஜினி செந்தில், திருமலை ஆகியோர் செய்திருந்தனர்.