தங்கள் படங்களை விளம்பரப்படுத்துவதில் ஷாருக்கானும் அமீர்கானும் சிறப்பாக செயல்படுவார்கள். ஷாருக் தனது ஒவ்வொரு படத்திற்கும் முழுமூச்சுடன் விளம்பரங்களை முடுக்கி விடுவார். ரா.ஒன்' படத்திற்கு YOUTUBE மற்றும் 'ரா.ஒன் GAME' என அடுத்த தளத்திற்கு போய் இருக்கிறார். ரா.ஒன்' படத்தினை பற்றி ஷாருக்கான் கூறியிருப்பது " நான் தற்போது சூப்பர் ஹீரோ பாத்திரத்தில் நடிக்க தூண்டு கோலாக அமைந்தது ரஜினி சார் நடித்த 'எந்திரன்' தான். 'எந்திரன்' ஒரு சிறந்த சூப்பர் ஹீரோ படம். ரஜினி சார் மற்றும் ஷங்கர் இருவரும் இணைந்து ஒரு பெரிய சூப்பர் ஹீரோ படத்தினை கொடுத்து இருக்கிறார்கள். எனக்குள் இருக்கும் குழந்தை எப்போதுமே ஒரு சூப்பர் ஹீரோ படம் பண்ண வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருக்கும். 'ரா.ஒன்' படத்தில் நான் நடித்ததற்கு நான் பார்த்து வளர்ந்த SUPERMAN, BATMAN, SHAHANSHAN மற்றும் 'எந்திரன்' உள்ளிட்ட படங்கள் தான் காரணம். " 'ரா.ஒன்' படத்தில் ரஜினிகாந்த் ஒரு சின்ன பாத்திரத்தில் நடித்திருக்கிறார். எனவே தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் 'ரா.ஒன்' தமிழ் பதிப்புக்கு ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு இருக்கிறது. சென்னையில் இப்படம் 3D படமாக வெளியாகும் என்று அறிவித்தார்கள். ஆனால் தற்போது 3D பிரிண்ட் சென்னைக்கு இன்னும் தயாராகவில்லையாம். வெகு விரைவில் அப்படம் 3D-யிலும் வெளியாகும் என அறிவித்துள்ளனர். ரஜினிகாந்தை 3D-யில் பார்க்க அவரது ரசிகர்கள் மிக ஆர்வமாக உள்ளனர். ராணா'வுக்காக காத்திருக்கும் ரஜினி ரசிகர்களின் யானைப் பசிக்கு 'ரா ஒன்' சோளப் பொறியாவது கிடைத்துள்ளது. அதனால் என்ன.. ரஜினி ரசிகரைப் பொறுத்தவரை தீபாவளியன்று ரஜினியை திரையில் பார்க்கலாம். |
சினிமா >