சிறுத்தைக்குப் பிறகு ‘சகுனி’படத்தில் நடித்து வந்தார் கார்த்தி. ஆனால் கடைசி இருபது நாள் படப்பிடிப்பு அந்தப் படத்துக்கு இன்னும் மிச்சமிருக்க தற்போது அந்தப் படத்தை அப்படியே வைத்து விட்டு, ரகசியமாக ஒரு படத்தின் படப்பிடிப்பில், எந்த அறிவிப்பும் இல்லாமல் கலந்து கொண்டிருகிறார் கார்த்தி. அந்தப் படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை என்பதோடு, சிறுத்தை படத்தை இயக்கிய சிவாதான் இந்தப் படத்தையும் இயக்கி வருகிறார் என்ற ஹாட் தகவல் நம்மை எட்டியது. ![]() இந்தப் படத்துக்கு ‘கத்தி’ என்ற டைட்டிலை பதிவு செய்யும்படி ஹீரோ கார்த்தியிடம் சொன்னாராம் இயக்குனர் சிவா. கார்த்தியோ தனது தயாரிப்பாளரான ஞானவேல் ராஜாவிடம் “உடனே இந்த டைட்டிலை பதிவு செய்துவிடுங்கள்” என்று உத்தரவிட்டிருகிறார். அவரும் தயாரிப்பாளர் கவுண்ஸிலுக்கு சென்று டைட்டிலை பதிவு செய்யலாம் என்று போனால் ஏற்கனவே சன் டிவி அந்த டைட்டிலை பதி செய்து வைத்திருந்ததாம். சன் டிவி நமக்கு தோழமையான வளாகம்தானே என்று நேரில் சென்று சன் பிக்ஸர் சி.ஈ.ஓவிடம் தலைப்பைக் கேட்க “ சாரி ! இதே தலைப்பில் விரைவில் புதிய படத்தை தயாரிக்க இருகிறோம்.” என்று திருப்பி அனுப்பிவிட்டார்களாம். நொந்துபோன கார்த்தி டீம் ‘கத்தி’ என்ற டைட்டிலை விட மனமில்லாமல் ‘கார்த்தியின் கத்தி’ என தற்காலிகமாக பதிவு செய்து வைத்திருகிறார்களாம்! |
சினிமா >