ரா ஒன் படத்தில் ரஜினி நடிக்கவில்லை

posted Oct 16, 2011, 11:07 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Oct 16, 2011, 11:10 AM ]
ஷாருக்கான் கதாநயகனாக நடிக்கும் ‘ரா ஒன்’ இந்திப் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரே ஒரு காட்சியில் நடித்ததாகக் கூறப்படுகிறது. அதற்கான புகைப்பட ஆதாரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் இந்த படத்தின் கதை ‘வீடியோ கேம்ஸ்’ சம்பந்தப்பட்டது. ஷாருக்கான் சூப்பர் மேனாக கற்பனை பாத்திரத்தில் நடிக்கிறார். ஒரு காட்சியில் அவர் ஆபத்தில் சிக்கிக் கொள்ள ‘எந்திரன்’ ரஜினி ‘சிட்டி’ வந்து காப்பாற்றுவதுபோல் காட்சியாம்! இதில்தான் ரஜினிகாந்த் நடித்ததாக சொல்லப்படுகிறதாம்.ஆனால் கோலிவுட் வட்டாரத்தில் இந்தச் செய்தி பொய் என்றும் ரஜினி நடிக்கவில்லை. ‘எந்திரன்’ படத்தின் இமேஜை எடுத்து கிராஃபிக்ஸ் செய்து ‘ரா ஒன்’ படத்தில் சேர்த்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது!
ரஜினி நடிக்கும் ‘ராணா’ படத்தைத் தயாரிக்கும் ஈராஸ் நிறுவனம் தான் ‘ரா ஒன்’ படத்தையும் தயாரித்து இருக்கிறது. அதனால்��? ரஜினி தன் ‘எந்திரன்’ இமேஜை பயன்படுத்திக்கொள்ள சம்மதம் சொல்லியிருக்கிறார் என்றும் பேசிக்கொள்கிறார்கள்! இந்தச் செய்தி இப்போது மீடியாக்களில் பரப்பாக வெளிவந்துக் கொண்டிருக்கிறது.
ஏதாவது ஒரு ஆதாரத்தை வெளியிட்டு எங்கள் செய்தியை பொய்யாக்க வேண்டும் என்பதே எங்களின் ஆசை கூட…..வெளியிடுவார்களா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.