ஜெனிலியாவுக்கு திருமணம் நடந்தது... ஒரு கிசு கிசு ஓய்ந்தது!!

posted Feb 3, 2012, 10:27 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Feb 3, 2012, 10:28 AM ]
ஒருவழியாக நீண்ட நாட்களாக கிசுகிசுவாகவே இருந்து வந்த ஜெனிலியா - ரிதேஷ் தேஷ்முக் காதல் விவகாரம் கல்யாணத்தில் சுபமாக முடிந்துவிட்டது.

இன்று காலை இருவருக்கும் மும்பையில் பிரமாண்டமாக திருமணம் நடந்தது.

தமிழில் சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஜெனிலியா. இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.

ஜெனிலியாவும், இந்தி நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கும் 9 வருடங்களாக காதலித்து வந்தனர். ரிதேஷ் தேஷ்முக் மகராஷ்டிர முன்னாள் முதல்வரும் இப்போதைய மத்திய அமைச்சருமான விலாஸ்ராவ் தேஷ்முக்கின் மகன்.

இவர்கள் காதலுக்கு ஆரம்பத்தில் எதிர்ப்பு இருந்தது. ஆனாலும் காதலில் உறுதியாக இருந்ததால் சமீபத்தில் இருவர் பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.


இதையடுத்து ஜெனிலியா ரிதேஷ்முக் திருமண நிச்சயதார்த்தம் நேற்று நடந்தது. வட இந்திய பாணியில் மெஹந்தி, சங்கீத் நிகழ்ச்சிகளும் இரு தினங்களாக நடந்தன.

இன்று காலை மும்பையில் உள்ள கிராண்ட் ஹஸாத் ஓட்டலில் திருமணம் நடந்தது. திருமணத்துக்காக ஆடை அலங்கார நிபுணர்களை வைத்து பிரத்யேக ஆடைகள் வடிவமைக்கப்பட்டு இருந்தன.

தமிழ், தெலுங்கு, இந்தி திரையுலகப் பிரபலங்கள் பலரும் திருமணத்தில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

அரசியல் பிரபலங்கள் மத்திய அமைச்சர் சரத் பவார், பிருத்விராஜ் சவுஹான், பிரபுல் படேல் உள்பட பலரும் பங்கேற்று வாழ்த்தினர்.
Comments