சித்தார்த் - ஸ்ருதி பிரிந்தனர்!

posted Oct 14, 2011, 11:44 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Oct 14, 2011, 11:44 AM ]
நடிகர் சித்தார்த்தும் ஸ்ருதியும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு நடிகர் சித்தார்த்தும், ஸ்ருதி ஹாஸனும் ஒரு படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணமாகாமலேயே இணைந்து வாழ்வதாக கடந்த சில மாதங்களாகக் கூறப்பட்டு வந்தது. கமல் ஹாஸனுக்கும் மகளின் இநத உறவு குறித்து தெரியும் என்றும் கூறினர்.

இதனை ஸ்ருதி மறுக்கவில்லை. அவரிடம் கேட்டபோதெல்லாம், அது எனது தனிப்பட்ட விவகாரம் என்றே கூறி வந்தார். சித்தார்த்தும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்து வந்தார்.

இந்த நிலையில் இருவரும் இப்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக தெலுங்கு திரைப்பட உலகில் பரபரப்பாக செய்தி பரவி வருகிறது.உறவு குறித்து மவுனம் காத்தது போலவே, இந்தப் பிரிவு குறித்தும் ஸ்ருதி - சித்தார்த் எதுவும் கூற மறுத்துவிட்டனர். ஆனால் சித்தார்த் தன்மேல் ஆதிக்கம் செலுத்துவது பிடிக்காததால் ஸ்ருதி விலகிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

சித்தார்த் ஏற்கெனவே திருமணமாகி, மனைவியை விவாகரத்து செய்தவர் என்பவது குறிப்பிடத்தக்கது.