உதயநிதி ஸ்டாலினின் ஒரு கல் ஒரு கண்ணாடி படம் ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. படத்தின் ஹீரோ உதயநிதி என்றாலும், சந்தானத்துக்குதான் பெரிய வாய்ப்பு. இயக்குநர் ராஜேஷின் சென்டிமெண்ட்டுக்காக இந்தப் படத்தில் எக்கச்சக்க நட்சத்திரங்கள். சினேகா, ஆர்யா, ஆன்ட்ரியா ஆகியோர் கெஸ்ட் ரோலில் வருகிறார்களாம் படத்தில். ஹன்ஸிகா மோத்வானி கதாநாயகியாக நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. வரும் 22-ம் தேதியிலிருந்து படத்துக்கான விளம்பரத்தை ஆரம்பிக்கவிருக்கிறார்கள். சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் மாதிரி ஒரு காமெடி விருந்தாக ஓகேஓகே அமையும் என்கிறார் இயக்குநர் ராஜேஷ். |
சினிமா >