திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க சினேகாவுக்கு அனுமதி

posted Jan 23, 2012, 9:19 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Jan 23, 2012, 9:20 AM ]
சினோவும் பிரசன்னாவும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு என்ற படத்தில் இணைந்து நடித்தார்கள். அப்போது காதல் மலர்ந்தது. இவர்கள் காதலுக்கு இரு வீட்டிலும் முதலில் எதிர்ப்பு கிளம்பியது. பிறகு மனம் மாறி சம்மதம் தெரிவித்தனர். 
 
இதையடுத்து விரைவில் திருமணம் நடக்க உள்ளது. சினேகா தற்போது விடியல், ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கும் படங்களில் நடிக்கிறார். ரஜினியின் கோச்சடையான் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இதில் ரஜினி தங்கை வேடத்தில் நடிக்கிறார். இந்த படங்கள் முடிந்ததும் திருமணம் நடக்கும் என தெரிகிறது.
 
இதற்கிடையில் திருமணத்துக்கு பிறகு சினிமாவில் நடிக்க சினேகாவுக்கு பிரசன்னா தடை போட்டுள்ளதாகவும் எனவே சினிமாவை விட்டு அவர் விலகுவார் என்றும் கூறப்பட்டது. இதற்கு பதில் அளித்து பிரசன்னா கூறியதாவது:-
 
திருமணத்துக்கு பிறகு நடிக்க வேண்டாம் என்று சினேகாவிடம் நான் சொல்ல வில்லை. அவர் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் சினேகா அதை ஏற்பாரா என்று தெரிய வில்லை. அவர் நடிப்பதற்கு ஒரு போதும் நான் தடை போட மாட்டேன். அடுத்த மாதம் எங்களின் திருமண தேதியை அதிகார பூர்வமாக அறிவிப்போம்.
 
இவ்வாறு அவர் கூறினார்.