![]() என்னையும் தனுசையும் இணைத்து வெளியான கட்டுரை முற்றிலும் கற்பனையானது. ஆதாரம் இல்லாதது. இதற்காக நான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளேன். பதில் அளிக்காவிட்டால் அடுத்த கட்டமாக சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். சக நடிகர் என்ற முறையில் தனுசு படப்பிடிப்பில் தொழில் ரீதியாக எனக்கு உதவிகள் செய்தார். வயதுக்கு மீறி நடிப்பது என்பது சவாலானது. தனுசு ஏற்கனவே பல படங்களில் நடித்து உள்ளார். அந்த அனுபவத்தின் மூலம் எனது கேரக்டர் சிறப்பாக அமைய உதவிகள் செய்தார். தொழில் ரீதியாகவே எங்கள் தொடர்புகள் இருந்தது. இதை வைத்து தவறான வதந்திகளை பரப்புவது வருத்தம் அளிக்கிறது. தனுசு மனைவி ஐஸ்வர்யா வும் நானும் நண்பர்களாக இருக்கிறோம். இந்த வதந்தி எங்கள் நட்பை பாதிக்காது. இளைஞர்கள் ஒன்று சேர்ந்து நல்ல படமொன்றை எடுத்துக்கொண்டு இருக்கிறோம். பாடல் சிறப்பாக வந்து உள்ளது. படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். பள்ளி குழந்தைகள்போல் கஷ்டப்பட்டு படத்துக்காக உழைத்துள்ளோம். தெலுங்கில் பவன் கல்யாண் ஜோடியாக “கப்பார் சிங்” படத்திலும் நடிக்கிறேன். அவருடன் நடிப்பது இனிமையான அனுபவமாக உள்ளது. |
சினிமா >