சூர்யா,ஹரி இடையே மோதல்

posted Jan 13, 2012, 8:43 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Jan 13, 2012, 9:12 AM ]
சூர்யா-அனுஷ்காவை ஜோடியாக வைத்து சிங்கம் ஹிட் படத்தை கொடுத்தவர் இயக்குனர் ஹரி. இன்னொரு புதுப்படமும் மூவர் கூட்டணியில் உருவாக்கப் போவதாக தகவல் வெளியானது.
 
ஆனால் திடீரென்று சூர்யா, ஹரி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு படம் கைவிடப்பட்டதாகவும் வதந்தி பரவியது. இதுகுறித்து இயக்குனர் ஹரியிடம் மாலைமலர் நிருபர் கேட்டபோது அவர் கூறியதாவது:-
 
எனக்கும், சூர்யாவுக்கும் இடையே எந்த பிரச்சினையும் இல்லை. அவரை வைத்து அடுத்த படத்தை நான் இயக்குவது உறுதி. தமிழ் திரையுலகில் புதுமுயற்சியாக இப்படம் இருக்கும். அது புதிய கோணத்தில் இருக்கும்.
 
கமல் வழியில் ஆக்ஷனில் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கிறார். இன்னொரு நாயகி தேர்வு நடக்கிறது. படப்பிடிப்புக்காக காரைக்குடியில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.
 
விசாகப்பட்டினம் மற்றும் நைஜிரியா, தென் ஆப்பிரிக்காவிலும் படப்பிடிப்பு நடக்க உள்ளது. மார்ச் இறுதியில் படப்பிடிப்பை துவங்குகிறோம். பொங்கல் முடிந்ததும் இதுபற்றி அறிவிக்கலாம் என்று இருந்தோம். ஆனால் அதற்குள் படத்தை கைவிட்டு விட்டதாக தவறான வதந்தி பரவியுள்ளது