உலக அளவில் ஹிட்டான ஹாலிவுட் படங்கள் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்படுகின்றன. அந்த வரிசையில் ஜாக்கிசான் தயாரித்து நடித்த “1911” என்ற படமும் தமிழில் வருகிறது. 18-ந்தேதி ரிலீசாகிறது. இது ஜாக்கிசானின் 100-வது படமாகும். சீனாவில் மன்னராட்சிக்கு எதிராக நடந்த புரட்சியை மையமாக வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. மன்னர் ஆட்சிக்கு எதிராக மக்களை திரட்டி யுத்தம் செய்யும் ஒரு வீரராக ஜாக்சிசான் நடித்துள்ளார். மிரள வைக்கும் யுத்த காட்சிகள், ஆக்ஷன், காதல் போன்ற அம்சங்கள் படத்தில் உள்ளன. ஜாக்கிசானின் மின்னல் வேக சண்டையும் உள்ளன. இப்படத்துக்கு தமிழில் 200 பிரிண்ட்கள் போடப்பட்டு உள்ளன. வேறு எந்த ஹாலிவுட் படத்துக்கும் இவ்வளவு பிரிண்ட்கள் போடவில்லை. வால்மார்ட் பிலிம்ஸ் சார்பில் சாய் இப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறார். |
சினிமா >