விஜய் ரசிகர்கள் கோபத்தில்

posted Jan 21, 2012, 8:48 AM by Sathiyaraj Kathiramalai   [ updated Jan 21, 2012, 8:50 AM ]
நண்பன் படத்தில் விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா இணைந்து நடித்துள்ளனர். கிளைமாக்சில் விஜய்யை ஸ்ரீகாந்தும் ஜீவாவும் அடிப்பது போல் காட்சி உள்ளது. இதற்காக இருவர் மீதும் விஜய் ரசிகர்கள் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியானது. இது குறித்து ஸ்ரீகாந்திடம் கேட்ட போது அவர் கூறிய தாவது:-
 
விஜய்யை நானும், ஜீவாவும் அடிப்பது கதைக்கு தேவைப்பட்டது. முதலில் அடிக்க தயங்கினேன். ரசிகர்கள் ஏற்பார்களா என்று சந்தேகம் கிளப்பினேன். விஜய் அந்த காட்சிக்கு வரவேற்பு இருக்கும் என்று சொல்லி எங்கள் தயக்கத்தை போக்கி நடிக்க வைத்தார்.
 
படம் ரிலீசான பிறகு விஜய் ரசிகர்களிடம் இருந்து எதிர்ப்பு வரவில்லை. ஆத்திரப்படவும் இல்லை. மாறாக போன் செய்து பாராட்டினார்கள். படப்பிடிப்பில் மூவரும் ஜாலியாக இருந்தோம்.
 
விஜய் வேட்டைக்காரனாகவும் ஜீவா சேட்டைக்காரனாகவும் இருந்தனர். ஜீவாவுக்குள் வடிவேலுவும் சந்தானமும் இருக்கின்றனர். அந்த அளவு தமாஷ் பண்ணுவார். இரு நூறு பேர் மத்தியில் பேன்ட்டை கழற்றி நடிக்க நேர்ந்த போது கஷ்டமாக இருந்தது. மூன்று ஹீரோக்கள் படமாக இருந்தாலும் எல்லோருக்கும் சம வாய்ப்பு இருந்தது. நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் சீன்களும் அமைந்தன.
 
சிறந்த நடிப்பை வெளிப்படுத்த நல்ல இயக்குனர் அமைய வேண்டும். நண்பன் படத்தில் ஷங்கர் கிடைத்தார். ஷங்கர் சிறந்த நடிகர். ஒவ்வொரு கேரக்டரையும் நன்றாக செதுக்கினார். அவர் சொல்லி கொடுத்தபடி நடித்தேன்.