காமெடி நடிகர் விவேக்கும் இயக்குநராகிறார். வடிவேலுவைத் தொடர்ந்து விவேக்கின் சினிமா மார்க்கெட்டும் சரிந்து கொண்டிருக்கிறது. அதனால் மார்க்கெட் இருக்கும்போதே தனது இயக்குநர் ஆசையையும் நிறைவேற்றிக்கொள்வோம் என்ற முயற்சியில் இறங்கியிருக்கிறார் விவேக். அதாவது, இளைய தலைமுறையினருக்கு பசுமை சூழலின் முக்கியத்துவத்தை விளக்கும் வகையில் அப்படத்தை இயக்குகிறார் விவேக். என்றாலும் டாகுமெண்டரி படம் போல் இல்லாமல் வழக்கமான காமெடி, மசாலா அயிட்டங்களையும் கலந்தே இப்படத்தை இயக்குகிறாராம் விவேக். அவரிடம் இதில் உங்களுக்கு என்ன வேடம்? என்றால், நான் காமெடியனோ, இல்லை கதாநாயகனோ எந்த முடிவையும் எடுக்கவில்லை. சில தயாரிப்பு நிறுவனங்களிடம் இந்த படம் பற்றி பேசி வருகிறேன். அது முடிவானதும் நான் என்ன வேடத்தில் நடிக்கிறேன் என்பதும் முடிவாகும் என்கிறார் விவேக். |
சினிமா >