சுவாரஸ்யம்


திருமணத்திற்கு அப்புறமும் 'ஸ்வீட் நத்திங்ஸ்' இருக்கலாமே!

posted Mar 23, 2012, 11:10 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Mar 23, 2012, 11:10 AM ]

காதலிக்கும்போது காதலர்கள் நிறைய பேசுவார்கள். உள்ளூர் விசயம் முதல் உலக விஷயங்களை மணிக்கணக்கில் உட்கார்ந்து அலசுவார்கள். ஸ்வீட் நத்திங்ஸ் எனப்படும் இந்த பேச்சின் போது சின்ன விஷயத்தைக் கூட காரணமே இல்லாமல் ரொம்ப நேரமாக வறுத்தெடுப்பார்கள். ஆனால் அதே தம்பதியர் திருமணம் ஆன பின்னால் பேசக்கூட நேரம் கிடைக்காமல் தடுமாறுவார்கள். இதனால்தான் பெரும்பாலான குடும்பங்களில் சிக்கல் எழுவதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

திருமணத்திற்கு பிறகு பேச்சுக்கள் குறைந்து போய் உடல் ரீதியான உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது பலரின் வழக்கம். இது அசாதாரணமானதல்ல, இயல்பான விஷயமும் கூட. அதேசமயம், அதிக அளவிலான பேச்சுக்கள் கணவன் மனைவியாகட்டும், காதலர்களாகட்டும், உறவை வலுப்படுத்த உதவுகிறது என்கிறார்கள் உளவியல் நிபுணர்கள்.மன ரீதியான உறவு

உடலும், உடலும் இணைந்தால்தான் உறவா, அது இல்லாமலும் கூட இனிய உறவை அனுபவிக்கலாம். உண்மையில் உடல் ரீதியான உறவுகளை விட இந்த மன ரீதியான உறவுகள்தான் அன்பையும், பாசத்தையும், நேசத்தையும் வலுவாக்கும், இனிதாக்கும் என்கின்றனர் நிபுணர்கள். வெறும் பேச்சாக மட்டுமல்லாமல் மனைவிக்கு உதவுவது, சின்னச் சின்ன வேலைகளில் இணைந்து ஈடுபடுவது என்று செய்யலாம். இவையெல்லாம் இருவரின் அன்பையும் நெருக்கமாக்க உதவுகிறதாம்.

சின்ன சின்ன உதவிகள்

வார விடுமுறை நாட்களில் மனைவிக்கு சின்னதாய் சில உதவிகள் செய்தால் அலாதிப் பிரியம் வருமாம். பெரிதாக செய்யக் கூடத் தேவையில்லை. காய்கறி நறுக்கிக் கொடுக்கலாம், அடுப்பில் ஏதாவது வைத்திருந்தால் அதை கவனிக்கலாம். மனைவி கேட்கும் பொருட்களை எடுத்துக் கொடுக்கலாம். கொடுக்கிற சாக்கில், சின்னதாக ஒரு முத்தம் வைக்கலாம். இதெல்லாம் மனைவியருக்கு அபரிமிதமான சந்தோஷத்தைக் கொடுக்கிறதாம்.

அடடா, இப்படி ஒரு கணவர் கிடைக்க புண்ணியம் செய்திருக்கணும் என்ற சந்தோஷத்தில், சாப்பாட்டில் உப்பு, காரமெல்லாம் கரெக்ட்டாகப் போட்டு சமைத்துக் கொடுப்பார்களாம்.

மனதிற்கு இதமான மலையேற்றம்

வார விடுமுறையில் சினிமா, பீச் என்று போவதைப் போல மலையேற்றமும் நல்லதொரு அனுபவம் தரும். நிறையப் பேருக்கு இந்த டிரக்கிங் தரும் இனிய அனுபவம் குறித்த ஞானம் இருப்பதில்லை. ஆனால் உண்மையில் ஜோடிகளாக இதுபோன்றவற்றில் ஈடுபடும்போது மிகுந்த உற்சாகம் பிறக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது, அனுபவித்தால்தான் தெரியும். கணவனும், மனைவியுமாக போகும்போது நிச்சயம் வித்தியாசமாக உணர்வீர்கள். இது உடல் ரீதியாகவும் இருவரையும் பிட் ஆக வைத்திருக்க உதவும். உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வையும் கொடுக்கும். வித்தியாசமான அனுபவத்தையும் கொடுக்கும்.

காரோட்ட கத்துக்குடுங்க

குக்கிங், டிரக்கிங் என இவற்றில் இப்படி ஒரு கிக் இருக்கிறது என்றால், டிரைவிங் இன்னொரு சுவாரஸ்யமான விஷயம். உங்களது மனைவி வாரம் முழுவதும் வாகனத்திலேயே செல்பவராக இருந்தால், விடுமுறை நாளில் அவரை உட்காரச் சொல்லி நீங்கள் ஜாலியாக கூட்டிச் செல்லுங்கள். வாகனம் ஓட்டத் தெரியாத மனைவியருக்கு வாகனம் ஓட்டச் சொல்லித் தரலாம். இது காதலையும், அன்பையும் அதிகரிக்க வைக்கிறதாம். பரிவோடும், பாசத்தோடும், கவனத்தோடும், காதலோடும், கவலையோடும் வண்டி ஓட்டச் சொல்லித் தரும் கணவர்களை மனைவியருக்கு ரொம்பவே பிடிக்குமாம்.

உடல் ரீதியான உறவை விட இதுபோன்ற அக்கறையான அணுகுமுறைதான் மனைவியருக்கு மிகவும் பிடித்தமான விஷயம் என்கிறார்கள். அதுக்காக, வண்டியை இப்படி ஓட்டேன், ஏன் பிரேக் பிடிக்கிறே, கியரைப் போடாதே, யாரைக் கேட்டு திருப்பினே என்று டென்ஷனாக கத்திச் சொல்லித் தர வேண்டாம். அது ‘விபத்தில்’ போய் முடிந்து விடும் என்றும் எச்சரிக்கின்றனர்.

காதல் பார்வையுடன் இதுபோன்ற சுவாரஸ்யங்களையும் கலந்து பாருங்கள், வாழ்க்கை மகா இனிமையாக இருப்பதை உணர்வீர்கள். என்ன இந்த வார விடுமுறையை இன்பமானதாக மாற்ற தயாராகிவிட்டீர்களா?

வை திஸ் கொலைவெறி டி - முத்தான வரிகளின் விளக்கம் - நகைச்சுவை

posted Mar 18, 2012, 10:24 AM by Sathiyaraj Thambiaiyah


yo பாஸ்.. ஐ ம் சிங் சாங்..
அதாவது தான் என்ன செய்ய போறார்னு முதல்லயே சொன்னா டவுட்டு வராதுனு சிங் சாங்னு சொல்லுறாரு..
(அதுல சிங் சாங்னது மன்மோகன்சிங் சாங்னு நினைச்சு மன்மோகனார் விருந்து வச்சது வேறகதை..)

soup song .
காதல் தோல்வியர்களுக்கு அவரு வச்ச பேராம்..

flop song..
why this கொலவெறி கொலவெறி கொலவெறி di..
ரிதம் கரக்ட்..
maintain please
எதிர்காலத்தில மியூசிக் போடபோறார் போல..
ரிதம் கரக்ட் என்று சொல்லி புதுப்பையன் அனிருத்த சோதிச்சு பாக்கிறார்..(மனைவியின் படம் என்பதால்)

distance ல moonu moonu, moonu கலரு வைட்டு..
5ம் வகுப்பு பிள்ளைக்கு டியூசன் எடுக்கிறாரு போல.. தூரத்தில் மூன் இருக்குது.. அது வெள்ளை கலர் எண்டு சொல்லி குடுக்கிறாரு..

white-u background night-u night-u.. night-u colour-u black-u..
மூன் இரவில மட்டும் தான் வரும் எண்டு விளங்க படுத்துறதுக்கு சந்திரனின் பின்னணி இரவு.. இரவின்ர கலரு கறுப்புனு சொல்லுறாரு..


white-u skin-u girl-u girl-u girl-u heart-u black-u..
இப்ப பவன் அண்ணாவின் விளக்கம்..
பக்கத்தில ஸ்ருதி இருந்தவா.. அவாவின் பெயர் தெரியவில்லை.. அதால வைட்டு ஸ்கின் கேளு கேளு என்று சொல்கிறார்..

ஐஸி ஐஸி மீட்டு மீட்டு மையு ஃபியூச்சர் டார்க்கு..
(இங்க இங்கிலிசில யோசிக்காமல் தமிழ்ழ யோசிச்சு பாருங்க..) தனுஸ் தன்வாயாலேயே கெட்ட இடம் இதுதான்..தனுஸின் மனைவி பெயர் ஐஸ்வர்யா.. சுருக்கமா ஐஸ் என்று சொல்லலாம்.. ஐஸ்ஸை மீட் பண்ணியதால் அவற்ற எதிர்காலம் இருட்டாகிவிட்டதாம்.. (சமீபத்திய தனுஸின் பேட்டி இதை முழுமையாக உறுதிப்படுத்துவது வேறுகதை..)

மாமா.. நோட்ஸ் எடுத்துக்கோ.. அப்பிடியே கையில சினாக்ஸ் எடுத்துக்கோ..
பசிக்குது போல.. யாருப்பா புரொடியுசர்..

பப்பபபா பப்பா...
கைல கிளாஸ்...
ஒன்லி இங்கிலிசு.. ம்ம்ம்...
இங்கிபீசில படிக்கிறது எண்டுறதே மறக்குற அளவுக்கு தமிழ் பற்று போல.. ஹிஹி..

காண்ல கிளாசு...
கிளாஸில ஸ்கொச்சு.. ஐசு புல்லா tear-u ...
அடிக்கடி பார் போகவேண்டி வருது எண்டுறத சிம்போலிக்கா சொல்ல வாறாரு... திரும்பவும் ஐஸ்வர்யாவ இழுக்கிறாரு தனுசு..

empty life-u... girl-u come-u.. life-u reverse gear-u..
தனுஸிக்கு பொண்ணுங்கள பற்றி தெரியல போல... ஏனெண்டா.. பொண்ணுங்க வராத வரைக்கும் தான் எல்லாம் நல்லா இருக்கும்.. பொண்ணுங்க வந்தாச்சுன்னா எல்லாமே எம்டி தான்.. (அதிலயும் முதல்ல எம்டி ஆகிறது பேர்ஸ் தான்..)

loveu loveu oh my loveu . you showed me bouv-u...
காதல பற்றி தெரிஞ்சுதான் பாட்டெழுதுறாரா இல்ல..சும்மா பம்மாத்து காட்டுறாரா இவரு?? சரி ஸ்ருதிக்கு இவரு நாய் மாதிரி தெரியுறாரு போல

god-u i am dying now-u , she is happy how-u
இந்த பாட்ட கேட்டுட்டு சிலர் இவர் இதில சொல்லப்பட்டது போல போய் துலைஞ்சா நல்லது என்றும் நினைத்தார்கள்..போனால் சந்தோசமாகவும் இருப்பார்கள்..

this-u song-u for soup boys-u..
we don't have choice-u
யோ பாஸ்.. இந்த பாட்டே நம்மளுக்காக தானாமே... அப்ப கொண்டாடிட வேண்டியது தான்...
வை திஸ் கொலவெறி..

பெண்களின் மனதை கவர இதைப் படிங்க!

posted Mar 12, 2012, 10:23 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Mar 12, 2012, 10:23 AM ]

இந்த பொண்ணுங்களுக்கு எப்படி இருந்தா பிடிக்கும் என்று மண்டையை பிய்த்துக் கொள்கின்றனர் இன்றைய இளசுகள். இதையே நினைத்து கவலைப்பட்டுக்கொண்டிருக்கும் இளசுகளுக்கு பெண்களின் மனதை கவரவும், அவர்களுக்கு பிடித்தமாதிரி நடந்து கொள்ளவும் ஆலேசானை கூறியுள்ளனர் நிபுணர்கள். பெண்களோட பேசப்போறதுக்கு முன்னாடி இளைஞர்களே இதப் படிச்சிட்டு போங்க.

நேர்மையா இருங்க

நேர்மையான ஆண்களை மட்டுமே பெண்களுக்குப் பிடிக்கிறதாம். எதற்கெடுத்தாலும் பொய்சொன்னால் உங்களுடன் பழகுவது ரிஸ்க் என்று உங்கள் பக்கம் திரும்பி கூட பார்க்கமாட்டார்களாம்.

நகைச்சுவை உணர்வு
ஆண்களுக்கு நகைச்சுவை உணர்வு அவசியம். சிரிக்க சிரிக்க பேசும் ஆண்களையே பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனராம் உங்களின் பேச்சு ஆண்களை அப்படியே அட்ராக்ட் செய்யவேண்டும். அதேசமயம் நகைச்சுவை என்ற பெயரில் போரடித்துவிடக்கூடாது என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

பாதுகாக்கும் தன்மை

எந்த ஆணின் அருகில் இருக்கையில் பாதுகாப்பாக உணர்கின்றனரோ அந்த ஆண்தான் பெண்ணின் மனதை கவர்ந்தவன். அதனால்தான் எம்.ஜி.ஆர் காலத்திய திரைப்படங்களில் இருந்து இன்றைய தனுஷ் திரைப்படங்கள் வரை கதாநாயகன் நான்கு பேரிடம் சண்டை போட்டாவது கதாநாயகியை காப்பாற்றுவது போல காட்சி அமைக்கின்றனர் இயக்குநர்கள். எனவே பெண்களுக்கு பாதுகாப்பு அரணாக செயல்படுங்கள்.

அழகும், அறிவும்

ஆண்களுக்கு அழகு மட்டுமல்ல அறிவும் அவசியம் அது மாதிரியான ஆண்களையே பெண்கள் விரும்புகின்றராம். எனவே பெண்களுக்கு பிடித்தமாதிரி பேசவும் கற்றுக்கொள்வது அவசியம்.

அன்பும், பாசமும்

அதிக அன்போடும், பாச உணர்வோடும் இருக்கும் ஆண்களைத்தான் அதிகம் பிடிக்கிறதாம். வாழ்நாள் முழுதும் உன் கூட வருவேன் என்ற உறுதி மொழி தருவதோடு அதை கடைபிடிக்கும் ஆண்களை ரொம்ப ரொம்ப பிடிக்குமாம். எந்த காரணத்திற்காகவும் மனதை காயப்படுத்தாத ஆண்களைத்தான் அவர்கள் விரும்புகின்றனராம்.

ஆரோக்கியம் அவசியம்

உணவு, உடை, ஸ்டைல் என அனைத்திலுமே ஒரு தனித்தன்மை இருக்கட்டும். ஒரு ஹைஜீனிக் பெர்சனைத்தான் பெண்கள் விரும்புகின்றனராம். ஏதாவது சிறிய தவறு நேர்ந்தாலும் உடனடியாக மன்னிப்பு கேட்கும் ஆண்களை அவர்கள் நேசிக்கின்றனராம்.

இடைவெளி அவசியம்

எப்பவுமே கொஞ்சம் இடைவெளி விட்டுப்பேசும் ஆண்களைத்தான் பெண்கள் அதிகம் விரும்புகின்றனராம். அதேபோல் மரியாதையோடு பேசும் ஆண்களைத்தான் அவர்கள் எதிர்பார்க்கின்றனராம்.

நட்பான ஆண்கள்

முதல்ல நட்பா பேசுங்க அதைத்தான் பெண்களும் எதிர்பார்க்கின்றனர். உங்களின் நட்பான அணுகுமுறை பெண்களின் மனதை கவரும்.

ஓவரா சீன் போடாதீங்க

பெண்களை கவர் பண்ண ஓவரா சீன் போடும் ஆண்களைக் கண்டாலே பெண்களுக்கு அலர்ஜியாம். எனவே எதையுமே அளவோடு செய்யுங்கள். நம்பிக்கையோடு செயல்படுங்கள் வெற்றி நிச்சயம் என்கின்றனர் நிபுணர்கள்.

காதலில் வெற்றி பெற காதலியைப் பாராட்டுங்க!

posted Mar 10, 2012, 9:42 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Mar 10, 2012, 9:42 AM ]

காதலில் முதல் சந்திப்பு, முதல் முத்தம், முதல் ஸ்பரிசம் என்பது வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாதது. காதலர்கள் இருவரும் முதன் முதலாய் தனியாக சந்திக்க வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் காதலியை கவரும் வகையில் காதலன் நடந்து கொள்ளவேண்டும் என்று உளவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர். இல்லையெனில் முதல் சந்திப்பே இறுதி சந்திப்பாகிவிடும். எனவே காதலியை சந்திக்கச் செல்பவர்கள் கவனமா படிங்க...

பதற்றம் வேண்டாம்

முதன் முதலாக தனியாக பார்க்கப்போகிறோம் என்ற உடனே என்ன பேசுவது? எப்படி பேசுவது என்ற பதற்றம் எழத்தான் செய்யும் எனவே தனியாக ஹோம் ஒர்க் செய்யுங்கள். சொதப்பாலாக பேசக்கூடாது. காதலி என்பவள் வாழ்நாள் முழுவதும் உங்களுடன் வரவேண்டும் என்ற எண்ணத்தோடு தனித்தன்மையான பதில்களை ரெடி செய்து கொண்டு சந்திக்கச் செல்லுங்கள்.


நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை

காதலியை சந்திக்க காத்திருக்கும் தருணங்களில் பாராட்டி ஒரு குட்டிக் கவிதை எழுதி விடலாம். அவரை சந்தித்த உடன் அதை கூறலாம். காதலியின் உடை அலங்காரம், பேச்சு, சிரிப்பு என சின்ன சின்ன விசயங்களில் பாராட்டு மழை பொழியுங்கள். உங்கள் பேச்சு அவர்களை மெதுவாக தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதை உணரும் போது காதலியின் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!!

காதலியை சுற்றி வரட்டும்

இருவரும் பேசிக்கொள்ளும் போது எதைப் பற்றி ஆரம்பித்தாலும் காதலியை சுற்றியே இருக்கட்டும். ஏனெனில் அதைத்தான் எல்லா பெண்களும் விரும்புவார்கள். பேசும்போதே விருப்பங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். காதலியை நிறைய பேசவிடுங்கள். நீங்கள் அவர்கள் பேசுவதை ரசியுங்கள். அதுவே வெற்றிக்கு வழி வகுக்கும்.

நெருக்கம் ஏற்படும்

காதலியை உற்சாகப்படுத்தும் விசயங்களை பேசுங்கள். அதையும் முக பாவங்களுடன் பேசினீர்கள் என்றால் உங்கள் உற்சாகம் அவர்களையும் தொற்றிக்கொள்ளும். உங்களை ஒரு உற்சாகமான மனிதராக நினைப்பார்கள்.நீங்கள் விரும்புவது கேள்விகளுக்கான பதில்கள் அல்ல. நெருக்கம்தான். ஆகையினால் கேள்விகள் உங்களுக்குள் நெருக்கம் ஏற்படுத்துவது போல் அமையட்டும்.

கண்களின் பாஷைகள்

காதலியின் கண்களைப் பார்த்துப் பேசுங்கள். உங்கள் பார்வை அவருடைய முகத்திலேயே இருக்கட்டும். அவரின் உடலின் வேறு பாகங்களில் பார்வை செல்வது அவர்களுக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தும். அதே போல் அவர் முகத்தைப் பார்க்காமல் விட்டத்தையோ, சுற்று முற்றும் பார்ப்பதையோ பெண்கள் விரும்பமாட்டார்கள். அதேபோல் தன்னம்பிக்கையுடன் பேசுங்கள். தயக்கம், பயம் ஆகியவை இருக்கக் கூடாது. நீங்கள் பேசும் உறுதியான பேச்சு அவர்களை நிச்சயம் கவரும்.

சுவாரஸ்யம் முக்கியம்

முதலில் பேசும்போது பேச ஒன்றுமில்லாத நேரம் ஒன்று ஏற்படுமாயின் நீங்களே சில சுவாரசியமான விசயங்களைப் பற்றிப் பேச ஆரம்பிக்கலாம். உங்கள் வாழ்வில் நடந்த நகைச்சுவையான நிகழ்ச்சிகளை முன்கூட்டியே தயார்செய்து கொண்டு செல்லுங்கள். உற்சாகமாக நீங்கள் பேசும் நகைச்சுவைப் பேச்சு பெண்களை எளிதில் கவரும். அவளைச் சிரிக்க வைக்கும் கலையைக் கற்று விட்டீர்கள் என்றால் மேட்டர் ஈசிதான்!. கொஞ்சம் பொது அறிவும் அவசியம் எனவே அப்டேட்ஆக இருங்கள்.

உங்களை ரொம்ப பிடிக்கும்

இருவருக்கும் பொதுவான விசயங்கள் என்ன என்று துப்பறியுங்கள். அவளுடன் பேசும்போது அந்தப் பொதுவான விசயத்தை வெளிக்கொணருங்கள். எனக்கும் அது பிடிக்கும் என்று ஆரம்பிங்க!!. எல்லாப் பெண்களும் கட்டாயம் ஏதாவதொரு பொழுதுபோக்கு ஹாபி வைத்திருப்பார்கள். காதலியின் பொழுது போக்கு அம்சங்கள் பற்றிக் கேட்கவும். அதில் அதிக ஆர்வம் காட்டிப் பேசினால் உங்களை அவளுக்குப் பிடிக்கும்

அவளின் குடும்பத்தில் உள்ள நபர் களைப் பற்றி, அண்ணன்கள், தம்பிகள் பற்றி விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். அவர்களிடம் உள்ள சிறப்பு அம்சங்களைப் பாராட்டிப்பேசுங்கள். இப்படி நாலைந்து பொதுவான விசயங்களைப் பிடித்துக் கொண்டுபேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. உங்கள் காதலும் வெற்றிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்துவிடும்.

'உச்சா' போனதை படம் பிடித்துக் காட்டிய கூகுள்-'கேஸ்' போட்ட பிரெஞ்சுக்காரர்!

posted Mar 2, 2012, 10:53 AM by Sathiyaraj Thambiaiyah

கூகுளின் ஸ்ட்ரீட் வியூ அப்ளிகேஷன் (தெரு நிகழ்வுகளைக் காணும் வசதி) மூலம் தனது வீட்டு முன் பகுதியில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்ததை படமாக்கி வெளியிட்டு தனக்கு பெரும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விட்டதாக கூகுள் மீது பிரெஞ்சுக்காரர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் மெய்ன் எட் லாய்ர் பகுதியைச் சேர்ந்த 50 வயதான ஜான் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது வீட்டு முன்பகுதியில் சிறுநீர் கழித்துள்ளார். இது கூகுளின் ஸ்ட்ரீட் வியூ அப்ளிகேஷனில் பதிவானது. உடனே கூகுள் அந்த புகைப்படத்தில் உள்ள ஜானின் முகத்தை மங்கலாக்கி அதை இணையதளத்தில் வெளியிட்டது.

என்ன தான் முகம் மங்கலாக இருந்தாலும் ஜானின் கிராமத்தினர் ஏய், இது நம்ம ஜான்ய்யா என்று கண்டுபிடித்து கேலி பேசி சிரிக்க ஆரம்பித்தனர். இதனால் ரொம்ப ஷேமாகி விட்டது ஜானுக்கு.

ஆத்திரமடைந்த அவர் கூகுள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தான் சிறுநீர் கழிக்கும் புகைப்படத்தை வெளியிட்டதற்காக ரூ. 6,55,950 நஷ்ட ஈடாக கேட்டுள்ளார். இந்த வழக்கு ஆங்கர்ஸ் நகரில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கை ரத்து செய்யுமாறு கூகுள் நிறுவனத்தின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் வரும் 15ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது.

ஸ்ட்ரீட் வியூ வசதி மொத்தம் 30 நாடுகளில் உள்ளது. இந்த வசதி கடந்த 2008ம் ஆண்டில் இருந்து பிரான்ஸில் உள்ளது.

'கவர்' பண்ண முடியலையா?அறிவுப் பூர்வமாக பேசி அசத்தலாம்!

posted Mar 1, 2012, 10:29 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Mar 1, 2012, 10:32 AM ]

இந்தப் பொண்ணுங்களை புரிஞ்சிக்கவே முடியலை. ஒருசமயம் ஆசையா பேசுறாங்க. அப்புறம் முகத்தை தூக்கி வச்சிக்கிறாங்க என்று புலம்பும் ஆண்கள் அதிகம். ஆழ்கடல் ரகசியத்தைக்கூட அறிந்துவிடலாம் ஆனால் மங்கையரின் மன ஆழத்தை அறிவது இயலாத காரியம் என்று தத்துவம் பேசும் ஆண்கள் ஒரு ரகம். காதலியின் மனதை அறிந்து கொண்டு அவர்களை கவர நினைக்கிறீர்களா? இதோ உங்களுக்காகவே இந்த டிப்ஸ்.

காதலில் வெற்றிபெறவும், மகிழ்ச்சிக்கான திறவு கோலாகவும் திகழ்வது நம்பிக்கை. உங்க காதலி மேல் முழு நம்பிக்கை வைக்க வேண்டும். அப்புறம் உங்க காதலியைப் பத்தி முழுவதுமா தெரிந்து கொள்வது அவசியம். அதனால் வாழ்க்கையை பொறுத்தவரைக்கும் உங்க காதலி விரும்பக்கூடிய விஷயங்கள் என்னென்ன? என்று முதல்ல கண்டுபிடிக்க முயற்சி பண்ணுங்க…

பெண்கள் பலவிதம்

ஒவ்வொரு பெண்ணும் வித்தியாசமானவங்க. சில பேருக்கு பிங்க் கலர்னா பிடிக்கும். சில பேருக்கு ஜீன்ஸ் டிரெஸ்னா பிடிக்கும். சில பெண்கள் குதிரைகள்னா ரொம்ப விரும்புவாங்க. இன்னும் சொல்லப் போனா.. சில பெண்கள் “நெய்ல் பாலிஷ்”-னா ரொம்ப விரும்புவாங்க. விருப்பங்களிலேயே இத்தனை வித்தியாசங்கள் இருக்கு. அதனால பொதுவான விஷயங்கள் எல்லாமே பெண்களுக்கு பிடிக்கும்னு நினைக்காதீங்க.

எப்போதுமே ஆண் தான் தன்னிடம் முதலில் வந்து பேச வேண்டும் என்று நினைப்பவர்கள் தான் பெண்கள். அதனால எந்த நேரத்திலும் இன்சல்ட் பண்ற மாதிரி பேசாம நல்லா டைம் எடுத்து உங்க காதலியை முழுமையாக தெரிஞ்சு வையுங்க. உங்க காதல் பொன்னானதாக இருக்கணும்னா.. அவங்க சொல்றதை பொறுமையா காதில வாங்கி அவங்களுக்கு பிடிச்சது விரும்புறது எல்லாத்தையும் புரிஞ்சு கொண்டு அதை செயல்படுத்துறதுக்கு ஆரம்பியுங்க.

ரொமான்ஸ் அவசியம்

அதே சமயத்துல நீங்க ரெண்டு பேரும் எங்காவது “டேட்டிங்” போகும் போது அவங்க உங்க கூட இருக்கும் போது நீங்க எப்படி உணர்வீங்க அப்படின்னு அவங்க கிட்ட சொல்லுங்க.ஏன்னா பெண்கள் எல்லாரும் வாழ்க்கையில் அனுபவம் வாய்ந்தவர்கள் கிடையாது. அதனால இன்றைக்கு வரைக்கும் அவங்க உங்கள் கிட்ட இருந்தே பல புதிய விஷயங்களை வெளிக் கொண்டு வர முயற்சிப்பாங்க.

இன்னொரு விஷயம்… தன் காதலன் மட்டும் தன்கிட்ட ரொமான்டிக்கா நடந்துக்கல என்றால், அவங்க ரொம்பவே “டல்” ஆய்டுவாங்களாம். அதனால உங்களுடைய அன்பான பேச்சாலும் அரவணைப்பாலும் உங்க காதலை வெளிப்படுத்துங்க.

தலைமைப் பண்பு

என்ன செஞ்சாலும் சில பெண்களை கவரவே முடியாதுங்க. அப்படிப்பட்ட விதிவிலக்கான பெண்களை அறிவுப்பூர்வமாக பேசி அசத்தலாம். தன்னம்பிக்கை நிறைந்த, தலைமைப் பண்பு கொண்ட ஆண்களை சிலர் விரும்புவாங்க. அப்படிப்பட்ட பெண்களை அவங்களுக்கு ஏற்றார்போல பேசி கவரலாம். ஒருசிலர் சமூக ஆர்வலரா இருப்பாங்க, சமுதாய சேவை செய்வது அவங்களுக்குப் பிடிக்கும். அந்த மாதிரி பெண்களை அவங்களுக்கு பிடித்தமாதிரி நடந்து கொண்டு அசத்தலாம்.

உங்க காதலி எப்படிப்பட்டவங்க அதை தெரிந்து கொண்டு அசத்துங்கள். அவங்க குட்புக்கில் இடம் பெற்றுவிட்டால் உங்கள் காதல் வெற்றிதான்.

உலகின் மிகச் சிறிய மனிதர் நேபாள முதியவர் டாங்கி: உயரம் 21.5 இன்ச் மட்டுமே

posted Feb 27, 2012, 10:09 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Feb 27, 2012, 10:09 AM ]

நேபாளத்தைச் சேர்ந்த 72 வயது முதியவரான சந்திர பஹதூர் டாங்கி உலகின் மிகச் சிறிய மனிதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தென்மேற்கு நேபாளத்தில் உள்ள டாங் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திர பஹதூர் டாங்கி(72). அவரது உயரம் வெறும் 21.5 இன்ச் தான் அதாவது 54.6 செமீ. இந்நிலையில் கின்னஸ் உலக சாதனை நிறுவன அதிகாரிகள் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு லண்டனில் இருந்து காத்மாண்டு வந்தனர். அவர்கள் டாங்கியின் உயரத்தை ஒரே நாளில் 3 தடைவை அளந்தனர். இதையடுத்து உலகின் மிக குள்ளமான மனிதர் என்ற சான்றிதழை அவர்கள் டாங்கியிடம் வழங்கினர்.

இத்தனை நாட்கள் பிலிப்பைன்ஸைச் சேர்ந்த 59.9 செமீ உயரமுள்ள பாலாவிங் தான் உலகின் மிக குள்ளமான மனிதர் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றிருந்தார். தற்போது அந்த சாதனையை டாங்கி முறியடித்துள்ளார்.

இதுவரை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற மிக குள்ளமானவர்களிலேயே டாங்கிக்கு தான் அதிக வயது என்பது குறிப்பிடத்தக்கது. வெளிநாடுகளுக்கு செல்லவும், உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திக்க விரும்புவதாகவும் டாங்கி தெரிவித்துள்ளார்.

வண்ணங்களும் பெண்களும்

posted Feb 12, 2012, 10:21 AM by Sathiyaraj Thambiaiyah

"எனக்கு மயிலிறகு பச்சை கலரில் தான் சுடிதார் வேண்டும்"

"உனக்கு கொஞ்சம் கூட கலர் சென்ஸே இல்லை. இது Baby Pink.. இது Onion pink. எப்படி ரெண்டுக்கும் மேட்ச் ஆகும்?"

"நல்லா தான் இருக்கு.. ஆனா, இதுவே கொஞ்சம் Magenta வா இருந்தா நல்லா இருந்திருக்கும்"

என்னங்க? உங்க வீட்டிலும் இப்படி கலர் தொடர்பான போராட்டங்கள் நடக்குதா?வண்ணங்கள் தொடர்புடைய துறைகளில் (ஜவுளி, ஓவியம்) வேலை செய்யும் ஆண்களைத் தவிர பெரும்பாலான ஆண்களுக்கு வண்ணங்களின் பட்டியல் மிக குறைவு தான். இதனாலேயே, பலர் தங்கள் வீட்டுப் பெண்களுக்குத் துணி எடுக்கும் போது 
அல்லல்படுகிறார்கள்!


வண்ணங்களைப் பற்றிய ஆய்வு செய்த நிபுணர்கள் வண்ணங்களை ஆண்களும், பெண்கலும் எப்படி பார்க்கிறார்கள் என்று ஒரு படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.. படம் இதோ:


சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்று நிறங்களை மட்டுமே மனித கண்களால் காண முடிகிறது. அவற்றின் கலவையே பிற நிறங்களாக மனிதர்களுக்குத் தெரிகிறன. அனைத்து நிறங்களும் சேர்ந்த நிறம் வெள்ளையாகும், எதுவும் இல்லாதது கருப்பாகவும் 
இருக்கும்.

ஆனால், நிறங்களைப் பிரித்தறிவதில் பெண்களுக்கு மட்டும் எப்படி இத்தனை திறன் இருக்கிறது? 


மனிதர்களைப் பாலின் அடிப்படியில் வேறுபடுத்திக் காட்டுவது நமது செல்களில் உள்ள மரபுத்திரிகள் (chromosome). பெண்களுக்கு இரண்டு X வகை மரபுத்திரிகளும், ஆண்களுக்கு 1 யும், 1 Y வகை மரபுத்திரியும் இருக்கும்.


நிறங்களைப் பிரித்தறிய உதவும் மரபணு X வகை மரபுத்திரியில் இருக்கிறது. 
பெண்களுக்கு இரண்டு X மரபுத்திரிகள் இருப்பதால் தான், அவர்களால் மிகவும் நுணுக்கமாக நிறங்களைப் பிரித்தறிய முடிகிறது.
கொசுறுத் தகவல்:

நிறக்குருடு நோய் பெண்களிடம் காணப்படாத்தற்குக் காரணமும் இதே தான். பாதிக்கப்பட்ட X மரபுத்திரியினை உடைய ஆண், நிறக்குருடிற்கு ஆட்படுகிறான். பாதிக்கப்பட்ட X மரபுத்திரியினை உடைய பெண்களோ, மற்றொரு X மரபுத்திரியினைக் கொண்டு சமாளித்துக் கொள்கிறார்கள். (இரண்டு X மரபுத்திரிகளும் பாதிக்கப்படுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு அல்லவா?)

காதலை சொல்ல சிகப்பு ரோஜா குடுங்க!

posted Feb 8, 2012, 10:14 AM by Sathiyaraj Thambiaiyah

காதலிலும் காதலர் தினத்திலும் ரோஜா முக்கியத்துவம் பெறுகிறது. அதிகமான காதலர்கள் ரோஜா மலரின் வழியே தங்களின் அன்பை பகிர்ந்துக் கொள்கின்றார்கள். ரோஜாக்கள் பல்வேறு வண்ணங்களை கொண்டுள்ளன. ஒவ்வொரு நிற ரோஜாவும் வெவ்வேறு அர்த்தங்களையும், குறிப்புகளையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

காதலை உணர்த்தும் சிவப்பு

சிவப்பு நிற ரோஜா உண்மையான காதலை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. பிரபஞ்சத்தில் மிகவும் பிரபலமான குறியீடுகளில் ஒன்றாக காதலை குறிக்கும் சிவப்பு ரோஜா விளங்குகிறது. ஆனால் வரலாற்றில், பல கலாச்சாரங்களில் அரசியல் மற்றும் மத குறியீடாகவும் இது பயன்படுத்தப்பட்டுள்ளது.

மகிழ்ச்சியை தெரிவிக்கும் மஞ்சள்

வரலாற்றில், மஞ்சள் நிறமானது சூரியனுடன் தொடர்புடையதாகக் கருதப்பட்டு வந்துள்ளது. மனிதர்களை உற்சாகமூட்டுவதற்கு மஞ்சள் நிற ரோஜா அனுப்பப்படுகிறது. இந்த மஞ்சள் நிற மலரானது மற்றைய நிறங்களின் காதல் அம்சம் இன்றி, பாலியலற்ற நேசத்தை, நட்புணர்வை வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த நிறம் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் பிரதிபலிக்கின்றது.

மதிப்பிற்குரிய செம்மஞ்சள்

மஞ்சளும் சிவப்பும் கலந்த செம்மஞ்சள் ரோஜாவானது நட்பை குறிக்கும் மஞ்சள் ரோஜாவுக்கும் காதலை குறிக்கும் சிவப்பு ரோஜாவுக்கும் இடையிலான பாலமாக கருதப்படுகிறது. ஆர்வத்தை இது வெளிப்படுத்துகிறது. 'நான் உங்களை மதிக்கிறேன்' என்பதை கூறுவதற்கு செம்மஞ்சள் ரோஜா அன்பளிப்பாக வழங்கப்படுகிறது.

வசீகரிக்கும் ஊதா

ஊதா நிறமானது பாரம்பரியமாக ராஜகுடும்பத்துடன் தொடர்புடையதாக கருதப்பட்டு வந்தது. இதன் அடிப்படையில் ஊதா நிற ரோஜாவானது வரவேற்பளித்தல், சிறப்பு என்பனவற்றை குறிக்கிறது.

தூய்மையை குறிக்கும் வெள்ளை

ஆரம்ப காலத்தில் வெள்ளை ரோஜாவை உண்மையான காதலின் குறியீடாக பயன்படுத்தினர். பின்னர் அதன் இடத்தை சிவப்பு ரோஜா பிடித்துக்கொண்டது. மணமகள் ரோஜா எனவும் இது குறிப்பிடப்படுகிறது. சில மதங்களில் மணமகளை வெள்ளை ரோஜாவால் அலங்கரிப்பர். இந்த வகையில், ஐக்கியம், ஒழுக்கம், புதிய காதலின் தூய்மை என்பனவற்றை வெள்ளை ரோஜா குறிக்கிறது.

அதேவேளை கௌரவம், பெருமதிப்பு என்பனவற்றையும் வெள்ளை ரோஜா பிரதிநிதித்துவப்படுத்துகிறது. எனவே பிரிந்து விடைபெற்றுச் செல்லும் அன்புக்குரியவர்களுக்கு வெள்ளை ரோஜா வழங்கப்படுவதுண்டு.

நன்றியை தெரிவிக்கும் இளஞ்சிவப்பு

இளஞ் சிவப்பு நிறமானது கருணை, நேர்த்தி, அழகு ஆகியவற்றுடன் தொடர்புடையது. அத்துடன் இனிமையையும், கவித்துவமான காதலையும் அது பிரதிபலிக்கின்றது. கடும் இளஞ்சிவப்பு நிற ரோஜாவானது நன்றியையும், மதிப்புணர்வையும் வெளிப்படுத்துவதுடன் நன்றி கூறுவதற்காக சிவப்பு நிற ரோஜாவை வழங்குவது சில கலாசாரங்களில் ஒரு பாரம்பரியமாகவுள்ளது. மிருதுவான இளம் சிவப்பு நிறமானது சாந்தம், மதிப்பு ஆகியவைகளை வெளிப்படுத்துகிறது. அதேநேரத்தில் அனுதாபத்தை தெரிவிக்கவும் இளம் சிவப்பு ரோஜா தரப்படுகிறது.

கூச்சப்படாமல் காதலை சொல்லுங்க !

posted Feb 3, 2012, 10:25 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Feb 3, 2012, 10:25 AM ]

மனதில் உள்ள காதலை சொல்லாமல் காதலிப்பது கருவை சுமப்பதற்கு சமம். தேர்வு எழுதினால் தோற்றுப்போய் விடுவோமோ என்ற அச்சத்தினாலேயே எத்தனையோ பேர் தேர்வையே ஒத்திப் போட்டு விடுகின்றனர். ஆனால் எத்தனை நாள்தான் கருவை சுமந்துகொண்டிருப்பது. ஒருநாள் பிரசவித்துதானே ஆகவேண்டும். சரியான தருணத்தில் சரியாக சொல்லப்படுகின்ற காதல் மட்டுமே வெற்றி பெருகின்றன என்கின்றனர் எக்ஸ்பர்ட்டுகள்.

காதலை சொல்லும் தருணம்

காதலை உணர்கிற தருணமும், காதலோடு நாம் வாழ்கிற தருணமும் மிகமிக அற்புதமானது. வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி காதல் தான் மனிதனை வழி நடத்துகிறது. அப்படிப்பட்ட காதலை சொல்ல பல வழிகள் உண்டு. முன்பெல்லாம் அன்னம், மயில், என பறவைகளை தூதுவிட்டு காதலை தெரிவித்தனர். இந்த நவீன யுகத்தில் பாதுகாப்பாக காதலை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றிகரமாக்க முடியும்.

காதலை உறுதிப்படுத்துங்கள்

நாம் காதலிக்கிறோம் என்பதை விட காதலிக்கப்படுகிறோமா? என்பது முக்கியமானது. நீங்கள் விரும்பும் நபரே உங்களை விரும்புகிறார் என்றால் உங்களை விட அதிர்ஷ்டசாலி யாரும் கிடையாது. உடனடியாக காதலை உறுதி செய்யும் நடவடிக்கையில் இறங்க வேண்டியதுதான்.

நண்பர்களுடன் சேர்ந்திருக்கும் தருணங்களில் உங்களவர் உடன் இருந்தால் அவரது மொத்த கவனமும் உங்கள் மீது மட்டுமே பதிகிறதா என்று கவனிக்கவும்.

அப்பொழுது உங்களுக்குப் பிடித்த விசயத்தைக் கூறுவதை விட பிடிக்காத விசயங்களை கூறுங்கள். மறுநாள் முதல் நீங்கள் விரும்பும் நபருக்கு அது பிடிக்காததாகி விடும்.

நீங்கள் விரும்பும் நபர் உங்களைத்தான் விரும்புகிறார் என்பது நிச்சயமாக தெரிந்து விட்டால் நேரடியாக சென்று இடம் பொருள் பார்த்து காதலை வெளிப்படுத்துங்கள். இந்த காலத்தில் தூது விடுவது எல்லாம் சரிப்பட்டு வராது. காதலை சொல்வதிலும் கூட ஒரு கவித்துவம் இருக்கவேண்டும். 14 ரோஜாப் பூக்களைக் கொண்ட ஒரு பூங்கொத்து தயாரித்திடுங்கள் பின்னர் அதை உங்கள் மனம் கவர்ந்தவருக்கு கொடுத்திடுங்கள். (பிப்ரவரி 14 காதலர் தினமில்லையா.. அதனால்தான் இந்த 14 ரோஜாக் கணக்கு)

மெழுகுவர்த்தி ஒளியில் இரவு விருந்து

மனங்கவர்ந்தவரோடு இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்யுங்கள். மெல்லிய விளக்கொளியில் அமர்ந்து உணவு அருந்தும் தருணத்தில் அழகாய் தயாரித்த வாழ்த்து அட்டையை ரோஜாப்பூவோடு கையில் கொடுங்கள்.

கேக் பாக்ஸில் காதல் வரிகள்

உங்களவருக்கு கேக் பிடிக்கும் என்றால் விசயம் ரொம்ப எளிதாகிவிட்டது. அழகாய் ஒரு கேக் ஆர்டர் செய்யுங்கள். உங்கள் விருப்பத்தை கவிதையாய் வடித்து அந்த பெட்டியில் வைத்து இனிப்போடு தெரிவியுங்கள் உங்கள் காதலை.

அழகான மோதிரம்

இளம் மாலை நேரத்தில் பூக்கள் அடர்ந்த சோலையில் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது அழகான ஒரு மோதிரம் பரிசளியுங்கள். அது அவருக்கு பிடித்திருந்தால் கண்டிப்பாக அணிந்துகொள்வார்.

மந்திர வாழ்த்து

நேரில் சொல்ல கூச்சமாகவோ, அச்சமாகவோ இருக்கிறதா கவலை வேண்டாம். இசை கார்டு வாங்கி பரிசளியுங்கள். ஆனால் ஒரு நிபந்தனை விதிக்கலாம். இரவுப் பொழுதில் யாருக்கும் தெரியாமல் அதை பிரிக்கச் சொல்லலாம். உங்களவர் அந்த கார்டை பிரிக்கும் போது ஐ லவ் யூ என்ற வார்த்தைகள் ஒலிக்கட்டும். அது உங்களின் நேசத்தை அவருக்கு உணர்த்தும். அப்புறம் பாருங்கள் உங்களுக்கான காதல் நேரம் தொடங்கிவிட்டது.

1-10 of 75