உறவின் மகிழ்ச்சிக்கு தினம் ஒரு வெரைட்டி

posted Dec 2, 2011, 9:45 AM by Sathiyaraj Thambiaiyah   [ updated Dec 2, 2011, 9:45 AM ]
உண்ணும் உணவிலேயே வெரைட்டி இருந்தால்தான் போராடிக்காமல் இருக்கும். தாம்பத்ய வாழ்க்கையில் தினமும் ஒரே மாதிரி இருந்தால் என்னடா இது என்று அலுப்பும், சலிப்பும் தோன்றுவது வாடிக்கை. இந்த சலிப்பை துரத்த சில ஆலோசனைகளை கூறியுள்ளனர் வல்லுநர்கள் .

தாம்பத்யத்திற்கு முதலில் மனதளவில் தயாராக வேண்டும். மூளை அமைதியாக இல்லை என்றால் உறவு குறித்து எண்ணமே தோன்றாது என்கின்றனர் மருத்துவர்கள். எனவே மனதையும், புத்தியையும், சீராக்கும் யோகா பயிற்சியை முதல்நாளில் தொடங்கவேண்டும் என்கின்றனர் ஆலோசகர்கள். தொந்தரவு செய்யும் எண்ணங்களை தூக்கி தூரப்போடுக்கள் அப்புறம் பாருங்கள் உற்சாகம் ஊற்றெடுக்கும்.

அதிகாலை உறவு

அதிகாலையில் எழுந்தவுடன் உறவு கொள்வது உற்சாகத்தை அதிகரிக்கும் என்கின்றனர். உடற்பயிற்சி செய்வதைக்காட்டிலும் இது ஆரோக்கியமான பயிற்சி என்பது கலிபோர்னியா பல்கலைக்கழக ஆய்வாளர்களின் கருத்து. 7 முதல் 13 நிமிடங்கள் வரை நீடிக்கும் உறவு ஒரு புதுவித உணர்வையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறதாம்.

உற்சாகமும் ஊக்கமும்

பெண்களுக்கு உற்சாகம் தரும் அவயங்களை ஊக்கப்படுத்துங்கள். பெண்கள் தங்களின் விருப்பத்தை தெரிவிக்க கூச்சப்பட்டாலும் அவர்களின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ப உறவு கொள்வதன் மூலம் அதிர்வலைகள் ஊற்றெடுக்கும் என்கின்றனர் செக்ஸாலஜிஸ்ட்கள்.

முத்தமிடுங்கள்

முத்தம் என்பது உறவை வலுப்படுத்தும் ஆயுதம் எனவே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் முத்தமிடுங்கள் என்கின்றனர் உளவியலாளர்கள். இது உறவு குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்கும். எனவே முத்தம் என்னும் ஆயுதத்தால் அன்பை வெளிப்படுத்துங்கள். அப்புறம் பாருங்கள் எதிர் தாக்குதலில் திக்குமுக்காடிப் போவீர்கள்

உடற்பயிற்சி

தினமும் ஒருமணிநேரம் உடற்பயிற்சி அவசியம் என்கின்றனர் கனடா நாட்டைச் சேர்ந்த ஆய்வாளர்கள். இது ஆண்களின் அவயங்களை ஃபிட்டாக்குவதோடு, அவர்களுக்கு இருக்கும் சின்னஞ்சிறிய குறைபாடுகளையும் போக்கும்.

படுக்கையறை கதைகள்

தினமும் உறங்கும் முன் உங்களுக்குப் பிடித்தமான படுக்கையறை கதைகளை பகிர்ந்து கொள்ளுங்கள். இது போன்ற கதைகள் மூளையில் உறவு குறித்த எண்ணங்களை ஊக்குவிப்பதோடு இருவரையும் உறவுக்கு தயார் படுத்தும். அதற்கான மூடினை உடனடியாக தோற்றுவிக்கும்.

விரல்களில் வித்தை

அவ்வப்போது தொடுவதன் மூலம் உங்களின் எண்ணங்களை உங்கள் துணைக்கு உணர்த்தலாம். இன்றைக்கு இது தேவை என்பதை சின்ன சின்ன தொடுகையின் மூலம் புரியவைப்பதன் மூலம் அவருடைய மனமும் ரெடியாகிவிடும் என்கின்றனர் உளவியலாளர்கள். நிறைய பெண்கள் தங்களின் எதிர்பார்பை தங்களின் துணைக்கு சொல்லத் தெரியாமல் தடுமாறுகின்றனர்.

எனவே தினந்தோறும் உறவில் ஒரே மாதிரியாக இல்லாமல் சற்றே கிரியேட்டிவிட்டியை பயன்படுத்தினால் தினம் தினம் உங்களுக்கு உறவில் உற்சாகம்தான்.